Friday, 26 June 2020

அஹோபில மடம் 44-வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் சுவாமிகள் முக்கூரில் தங்கியிருந்த போது நடந்த சம்பவம். இவர் தான் திருவரங்கம் ராஜகோபுரத்தை ஆசியாவிலேயே உயர்ந்ததாகக் கட்டினார்.

அக்ரஹார வீதியில் வெண்மணல் தகித்தது. மனித நடமாட்டம் இல்லாத ஒரு பாலைவனம் போல் தெரிந்தது வீதி.

‘யாரோ சாமி வந்திருக்குன்னு சொன்னாங்க. ஊர்ல யாருமே இல்லியே’ என்று எண்ணியவாறு சைக்கிளை மிதித்தேன். பெயர் தான் நவாபு. ஆனால் அலுமினிய பாத்திரங்கள் விற்றுத்தான் சோறு. வாப்பா சொன்னபோதே
படித்திருக்கலாம். தொழில் கற்றுக்கொள்ள வேண்டி பாத்திரக்கடை காதரிடம் வேலைக்குப் போனது எவ்வளவு பெரிய தவறு! இப்போது நினைத்துப் பயனில்லை. வயிறு என்று ஒன்று இருக்கிறது. அதற்குத் தன்மானம் எல்லாம் கிடையாது. சைக்கிளை விட்டு இறங்கி ஒரு மர நிழலில் நின்றேன்.

ஒரு வாய் தண்ணீர் குடித்தால் தேவலாம் போல் இருந்தது. அக்கிரஹாரத்தில் யார் தண்ணீர் தரப் போகிறார்கள்? வாப்பா காலத்தில் தெருவில் நடக்கவே விட மாட்டார்கள். இப்போது எவ்வளவோ மேல். வியாபாரம் செய்யும் அளவு முன்னேறி உள்ளது. அப்போது தான் கவனித்தேன். எதிர் வீட்டில் வாசல் திண்ணையில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். 4, 5 சின்னப் பையன்கள் கீழே உட்கார்ந்திருந்தார்கள். ஏதோ பாடம் படிப்பது போல் தெரிந்தது. பெரியவருக்கு உடம்பு ரொம்பவும் தள்ளாமையாக இருந்தது. உடம்பு முழுவதும் நாமம் போட்டிருந்தார். எதற்கும் இருக்கட்டும் என்று கைலியை இறக்கிவிட்டேன். பெரியவர் ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தார். எதற்கு வம்பு என்று சைக்கிளைக் கிளப்பிக் கொண்டு நடந்தேன். சொல்ல மறந்துவிட்டேன். வீதியில் நுழைந்ததும் டயர் பஞ்சரானது. எனவே தள்ளியபடியே தான் நடக்க வேண்டும். வீதியின் கிழக்குக் கோடிவரை நடந்தேன். பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் கதவு திறந்தே இருந்தது. ஆனால் வெளியில் யாரும் தென்படவில்லை. ‘பாத்திரம், அலுமினிய பாத்திரம், இண்டோலியப் பாத்திரம், பாத்திரம்..’ என்று கூவிப் பார்தேன். ஒரே ஒரு வீட்டு உள்ளிருந்து ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஆண் எட்டிப் பார்த்தார். அப்போதுதான் அது உறைத்தது. அடச்சீ தப்பு செஞ்சுட்டோமே.. அக்ரஹாரத்துலே அலுமினியப் பாத்திரம் யாரும் வாங்க மாட்டாங்களே! இதுக்குப் போயா இங்கே வந்தோம்

இந்த வெய்யில்லே. வந்த வழியே நடந்து சென்றேன். வெயில், தண்ணீர் இல்லை, பாத்திரம் விற்கவில்லை, மெள்ள தெருமுனைக்கு வந்துவிட்டேன். ‘

யோவ் பாத்திரம், பாத்திரம்..’ என்று கத்திக் கொண்டே ஒரு பிராமணப்பையன் அந்தப் பெரியவர் இருந்த வீட்டில் இருந்து ஓடி வந்தான். ‘உடனே வாப்பா..
பெரியவர் கூப்பிடுறார்’, என்றான்.

பெரியவருக்கு அவன் என்னவோ பெயர் சொன்னான். எனக்குப் புரியவில்லை. என்ன தப்புப் பண்ணினேன் என்று நினைத்துப் பார்த்தேன். கைலியைக் கூட இறக்கித் தானே விட்டிருந்தேன். வந்தது வரட்டும்னு வண்டியைத் தள்ளிக் கொண்டு பெரியவர் இருந்த வீட்டு வாசலுக்குப் போனேன்.
அப்போது தான் பார்த்தேன். பெரியவருக்கு 70 வயசுக்கு மேல இருக்கும். ஒரு பீடம் மாதிரி இருந்தது. அதன் மேல் உட்கார்ந்திருந்தார். மார்பு, வயிறு, கை, நெற்றி என்று நாமம் போட்டிருந்தார். நெற்றி நாமம் மட்டும் சற்று தடிமனாக இருந்தது. வீட்டுக்கு உள்ளே இன்னும் பலர் இருந்தாங்க. வேட்டி மட்டும்
கட்டி இருந்தாங்க. நாமம் போட்டிருந்தாங்க.

பெரியவர் என்னை உட்காரச் சொன்னார். ஒரு ஓரமா உட்கார்ந்தேன்.
அதுக்குள்ளே ஒரு ஐயரு வந்து,’ கொஞ்சம் தள்ளி உக்காருப்பா..’, என்று அதட்டினார். என்னைப் பெரியவர் உட்காரச் சொன்னது அந்த ஐயருக்குப் பிடிக்கவில்லை போல. பெரியவர் அந்த ஐயரை கோவமா ஒரு பார்வை பார்த்தார். பெரியவர் மட்டும் காவி கலர்ல துண்டு கட்டி இருந்தாரு. கையிலே மூணு கழிங்கள ஒண்ணாக் கட்டி, அது உச்சில ஒரு துணில கொடி போல இருந்துச்சு. அந்தக் கழிங்கள கையில வெச்சிருந்தாரு.

‘தமிழ் தெரியுமான்னு ஒரு கம்பீரமான குரல் கேட்டுச்சு. தலை நிமிர்ந்து பார்தேன். பெரியவர் தான் பேசியிருந்தார். தெரியும்னு தலை ஆட்டினேன். என்னமோ அவர்கிட்டே பேசுறதே கொஞ்சம் பயமா இருந்துச்சு.

அவரு முள்ளு மாதிரி தாடி வெச்சிருந்தார். தலைலேயும் வெள்ளை முடி. அசப்புல சிங்கம் மாதிரி இருந்துச்சு. ‘எந்த ஊர் உனக்கு?’ ‘பக்கத்துலே வேலூர் பக்கம் சாமி’
‘சாப்டாச்சா?’ ‘ஆச்சுங்க சாமி.

கருக்கல்ல கஞ்சி குடிச்சேங்க’. பெரியவருக்குப் புரியவில்லை.
அருகில் இருந்த நாமம் போட்ட இன்னொரு ஐயரு,’ அவன் கார்தாலே கஞ்சி சாப்டானாம் அடியேன்..’, என்று சொன்னார்.

பெரியவர் உள்ளே பார்த்து, ’ததீயாராதனம் ஆயிடுத்தா?’, என்று கேட்டார்.

இன்னொரு ஐயர் உள்ளே இருந்து ஓடி வந்து ஏதோ சொன்னார்.

பெரியவர் கேட்க அந்த ஐயர் ஏதோ சொன்னார். பாஷை புரியவில்லை.

இரண்டு நிமிஷம் நிசப்தம். ஏதோ பெரிய தவறு செய்துவிட்டோம் என்று நினைத்தேன்.

மேலே அண்ணாந்து பார்த்தேன். இடி இடிப்பது போல் பெரியவர் உள்ளே இருந்து வந்த ஐயரிடம் ஏதோ உத்தரவு போட்டார். அந்த ஐயர் உடனே கீழே விழுந்து வணங்கி உள்ளே சென்றார்.

 ‘எத்தனை பிள்ளை குட்டி உனக்கு?’, பெரியவர் என்னிடம் கேட்டார். ‘மூன்று பெண்கள் சாமி’, என்றேன். கொஞ்சம் பயமாகவே இருந்தது. ‘வீடு வாசல் இருக்கா?’ ‘அப்பா வைத்த வீடு ஒண்ணு இருக்கு சாமி, பாத்திரம் வியாபாரம் தான் தொழில்’, என்றேன். என்னவோ அந்தப் பெரியவர் பிடித்துப் போய் விட்டார்.

 இந்தக் கேள்விகளை யாரும் என்னிடம் கேட்டதில்லை. ஏதோ ஒரு அக்கறையுடன் கேட்பது போல் தோன்றியது. ‘பொண்கள் படிக்கறாளா?’, என்றார். ‘ஆமாங்கையா, ஸ்கோலு போவுறாங்க’, என்றேன். வாப்பா இருந்திருந்தால் இதே வயது தான் இருக்கும் அவருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக என் பயம் குறையத் தொடங்கியது.

என் குரல் சற்று வெளியே வருவது போல் உணர்ந்தேன். மற்ற ஐயர்கள் எல்லாரும் பெரியவரிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே மரியாதையுடன் இருப்பது போல் பட்டது. ‘இங்கே சாதம் போட்டா சாப்பிடறியா?’ அவர் அது தான் கேட்டாரா அல்லது பசி மயக்கத்தில் அப்படிக் காதில் விழுந்ததா தெரியவில்லை. குழப்பத்துடன் அவரையே பார்த்தேன். ‘சோறு போட்டா சாப்புடுவியான்னு கேக்குறாரு..’, என்றார் இன்னொரு ஐயர். அவர் குரலில் சற்று எரிச்சல் தெரிந்தது. ‘சாப்புடுறேன் சாமி’; என்றேன் நன்றியுடன். ஏனோ எனக்கு நெஞ்சை அடைத்தது. பக்கத்தில் ஒரு கொட்டகையில் சோறு போட்டார்கள்.

இரண்டு ஆள் சாப்பாடு சாப்பிட்டேன். உப்பு, காரம் எதுவுமில்லை.

சாப்பிட்டு முடித்ததும் பெரியவர் கூப்பிடுவதாகச் சொன்னார்கள். ‘சாப்டாச்சா?’ என்றார் புன்முறுவலுடன் தலையை ஆட்டினேன். ‘நன்னா இருந்துதா?’, என்று சிரித்தபடியே கேட்டர் பெரியவர். பதில் சொல்லாமல் மையமாக நின்றேன்.

‘பாத்திரம் எல்லாம் வித்துடுமா?’, என்று மறுபடியும் அவரே கேட்டார்

காலைலேர்ந்து ஒண்ணும் விக்கலீங்கையா. இங்கே ஐயமாரு இடம்னு தெரியாம வந்துட்டேன். அலுமினியம் வாங்க மாட்டாங்க. இனிமே வேற ஊர் தான் போகணும்’, என்றேன். ‘மொத்தமா என்ன விலை?’, என்றார். புரியாமல் நின்றேன். ‘எல்லாப் பாத்திரமும் வித்தா என்ன விலை கிடைக்கும்?’, என்று வேறொருவர் கேட்டார்.

‘100 ரூபா பெயரும் சாமி. அதுக்கு 2, 3 நாள் ஆகும்’, என்றேன் புரியாமல். பெரியவர் அதிகாரி போல் இருந்த ஒருவரைப் பார்த்தார். அவர் உடனே 120 ரூபாய் எடுத்துக் கொடுத்து ’எல்லாத்தையும் நாங்களே வாங்கிக்கறோம்’, என்றார். ஒன்றும் புரியவில்லை. இது ஏதோ மடம் போல் தெரிகிறது. ஐயமார் மடம். அலுமினியம் வாங்கறாங்களே. நம்பவும் முடியவில்லை. ஆனால் பணம் கொடுத்துவிட்டார்கள். அப்போது பெரியவர் பேசினார்.

‘எனக்கு ஒரு உபகாரம் பண்ணணும். இந்த பாத்திரங்களை எல்லாம் கொண்டு போய் வடக்கு வீதிக்குப் பின்னாடி குடியானவத் தெரு இருக்கு
அங்க ஆத்துக்கு ஒரு பாத்திரம்னு குடுக்கணும். குடுக்கறயா ?’, என்று
சொல்லி என்னை ஏறிட்டுப் பார்த்தார்.

இறைவன் கருணை வடிவானவன் என்று வாப்பா அடிக்கடி சொல்வார்.

 அஹோபில மடம் 44-வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் சுவாமிகள் முக்கூரில் தங்கியிருந்த போது நடந்த சம்பவம்.

இவர் தான் திருவரங்கம் ராஜகோபுரத்தை ஆசியாவிலேயே உயர்ந்ததாகக் கட்டினார்.

Monday, 22 June 2020

கிமு.482ல் தோன்றிய காஞ்சி மடமும் இதுவரை பொறுபேற்றவர்களின் விபரமும்

கிமு.482ல் தோன்றிய காஞ்சி மடமும் இதுவரை பொறுபேற்றவர்களின் விபரமும்

ஆதிசங்கரபகவத்பாதாள் தனது திக்விஜயத்திற்கு பிறகு, மோக்ஷபுரி என போற்றப்படும், காஞ்சிமாநகரத்தை வந்தடைகிறார் அங்கே தனக்கென ஒரு ஆஸ்ரமத்தை அமைத்திக் கொண்டார். தனது 32 வயதிற்குள் வியக்க தக்கும் வகையில் சாதனை புரிந்தார். 

அவரின் வாழ்க்கையில் சில நிகழ்வுகள்:- பிறந்தது-- கலி வருடம் 2593(கி.மு 509), சந்நியாசம் மேற்கொண்டது-- கலி 2603 (கி.மு 499), த்வாரகா மடத்தை அமைத்து அதன் தலைவராக ஹஸ்தமாலகரை நியமித்தது-- கலி 2611 (கி.மு 491), சீடர் தோடகாச்சாரியாரை தலைவராகக் கொண்டு ஜோதிஷ் மடத்தை ஸ்தாபித்தது கலி 2616 (கி.மு 486), பத்மபாதரை தலைவராக்கி கோவர்த்தன மடத்தை ஸ்தாபித்தது-- கலி 2617(கி.மு 485), சிருங்கேரியில் சீடர் சுரேஸ்வரை தலைவராக்கி சிருங்கேரி மடத்தை ஸ்தாபித்தது --கலி 2618 (கி.மு 484), ஸர்வக்ஞ பீடமென காமகோடி பீடத்தை காஞ்சியில் உருவாக்கியது-- கலி 2620(கி.மு 482), ஆதி சங்கரர் காஞ்சியில் முக்தியடைந்தாது --கலி 2625(கி.மு477).
இவர் கைலாசத்திலிருந்து ஐந்து ஸ்படிக லிங்கங்களை கொண்டு வந்தார், அவைகள் இப்போதும் கீழ்க்கண்ட இடங்களில் உள்ளன:- முக்தி லிங்கம்--கேதார்நாத், வர லிங்கம்--நேபாளம், போக லிங்கம்--சிருங்கேரி மடம், மோக்ஷ லிங்கம்- -சிதம்பரம், யோக லிங்கம்-- காஞ்சி காமகோடி மடம். 

காஞ்சியில் மடம் நிறுவி அதன் ஸ்தாபராக விளங்கியபின் இதுவரை 69 பேர் காஞ்சி மடத்தின் தலைமை பொறுப்பை பெற்றுள்ளனர். மறைந்த ஜெயேந்திரர் 69வது தலைமைப் பொறுப்பை வகித்து சமீபத்தில் முக்கியடைந்தார். தற்போது இந்த மடத்தின் 70வது தலைமை பொறுப்பை அலங்கரிக்கிறார் விஜயேந்திரர்.
இதுவரை தலைமை ஏற்றவர்களின் விபரங் களை எளிமையாக பார்ப்போம் .

1. ஆதி சங்கரபகவத்பாதாள்
இவரே காஞ்சி மடத்தின் ஸ்தாபகர், இங்கு அவர் ஸர்வக்ஞ பீடத்தின் தலைமையை ஏற்றார். ஆதிசங்கரர் தனது சிறுவயதிலேயே சந்நியாசம் பூண்டார், அதே போல் காஞ்சி மடத்திற்கு அதிபதியாகிறவர்கள் ப்ரம்மசரியத்திலிருந்து நேராக சந்நியாசம் பெறவேண்டும், அவர்களின் எல்லோருடைய திருநாமத்துடன் “இந்திர சரஸ்வதி” சேர்க்கப்படும். 

2 ஸ்ரீ சுரேஸ்வர சரஸ்வதி:-
இவர் மஹிஸ்மதியை சேர்ந்தவர், மந்தனமிஸ் ரர் என்ற பெயரில் வாதிட்டு தோற்று, ஆதிசங்க ரரின் சீடரானார், இவர் காஞ்சியில் முக்தி அடைந்தார்- -கி.மு 407, இவர் எழுதிய நூல்கள் வாதிக, நைஷ்கர்ம்ய சித்தி, இவரின் சிலை காமகோடிபீடத்திலுள்ளது, தினமும் அவருக்கு பூஜை செய்வர், இன்றும் மந்தனமிஸ்ர அக்ர ஹாரம் காஞ்சியிலுள்ளது.
3. ஸ்ரீஸர்வக்ஞாத்மன் சரஸ்வதி:-
தாமிரபரணி தீரத்திலிருந்து வந்தவர், ஏழு வயதில் சந்நியாசம் பெற்றார், ஸ்ரீ சுரேஸ்வரரின் கீழ் பாடம் பயின்றவர், இவர் எழுதிய நூல்கள்--ஸர்வக்ஞ விலாசம், சம்க்ஷேப ஸரீரகா, காஞ்சியில் கி.மு 364ல் முக்தியடைந்தார்.
4. ஸ்ரீஸத்யபோதேந்திர சரஸ்வதி:-
இவர் சேர நாட்டை சேர்ந்தவர், இவரும் சங்கரரின் பாஷ்யத்திற்கு உரை எழுதியுள்ளார், காஞ்சியில் கி.மு268ல் முக்தியடைந்தார்.
5. ஸ்ரீஞாநேந்திர சரஸ்வதி:-
இவர் எழுதிய நூல் “சந்திரிகா”, காஞ்சியில் கி.மு 205ல் முக்தியடைந்தார்.
6. ஸ்ரீசுத்தானந்தேந்திர சரஸ்வதி:
வேதாரண்யத்தை சேர்ந்தவர், காஞ்சியில் கி.மு 124ல் முக்தியடைந்தார்.
7. ஸ்ரீஆனந்த கணேந்திரசரஸ்வதி:-
சேரநாட்டை சேர்ந்தவர், சங்கர பாஷ்யத்திற்கு உரை எழுதியவர், காஞ்சியில் கி.மு 55ல் முக்தி யடைந்தார்.
8. ஸ்ரீகைவல்யானந்த யோகேந்திரசரஸ்வதி:-
திருப்பதியை சேர்ந்தவர், காஞ்சியில் கி.பி 28ல் முக்தியடைந்தார்.
9. ஸ்ரீக்ருபா சங்கரேந்திரசரஸ்வதி:-
ஆந்திர நாட்டை சேர்ந்தவர், ஆதிசங்கரரின் ஷண்மதஸ்தாபனத்தை உறுதிபடுத்தி அதை சீரிய முறையில் மக்களுக்கு அளித்தார், பகதி மார்க்கத்தை எளியமுறையில் செய்ய உதவினார், விந்திய பர்வதத்தில் கி.பி 69&ல் முக்தியடைந்தார்.
10. ஸ்ரீசுரேஸ்வரசரஸ்வதி:--
மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர், காஞ்சியில் கி.பி 127ல் முக்தியடைந்தார்.
11. ஸ்ரீசிவானந்த சித்கணேந்திர சரஸ்வதி:-
கர்நாடகத்தை சேர்ந்தவர், விருத்தாசலத்தில் கி.பி 172ல் முக்தியடைந்தார்.
12. ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி:-
பாலாற்றங்கரையிலிருந்து வந்தவர், சேஷாசல மலையில் கி.பி 235ல் மறைந்தார்.
13. ஸ்ரீசத்சித் கணேந்திரசரஸ்வதி:-
கடிலம் தீரத்திலிருந்து வந்தவர், அவதூத ராக வாழ்ந்தவர், காஞ்சியில் கி.பி 272ல் முக்தியடைந்தார்.
14. ஸ்ரீவித்யா கணேந்திரசரஸ்வதி:-
ஆந்திர நாட்டை சேர்ந்தவர், உக்ரபைரவரை அடக்கியவர் என்பர், அகஸ்திய மலையில் கி.பி 317ல் முக்தியடைந்தார்.
15. ஸ்ரீகங்காதரேந்திரசரஸ்வதி:-
ஆந்திர நாட்டை சேர்ந்தவர், அகஸ்தியமலை யில் கி.பி 329ல் முக்தியடைந்தார்.
16. ஸ்ரீஉஜ்வல சங்கரேந்திரசரஸ்வதி:-
மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர், காஷ்மீரம் அருகிலுள்ள காலாபுரியில் கி.பி367ல் முக்தியடைந்தார்.
17. ஸ்ரீசதாசிவேந்திரசரஸ்வதி:-
காஷ்மீரத்தை சேர்ந்தவர், நாசிக் அருகிலுள்ள த்ரயம்பகத்தில் கி.பி 375ல் முக்தியடைந்தார்.
18. ஸ்ரீயோகபிலக சுரேந்திரசரஸ்வதி:-
மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர், உஜ்ஜயினில் கி.பி 385ல் முக்தியடைந்தார்.
19. ஸ்ரீமார்த்தாண்ட வித்யாகணேந்திரசரஸ்வதி:
கோதவரி தீரத்தில் கி.பி 398ல் முக்திய டைந்தார்.
20. ஸ்ரீமூக சங்கரேந்திரசரஸ்வதி:-
வானசாஸ்திர வல்லுநர், காஞ்சிகாமாட்சியின் கடாக்க்ஷத்தால் பேசியவர், கோதவரி தீரத்தில் கி.பி 437, முக்தியடைந்தார்.
21. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி:-
வடகர்நாடகத்தை (கொங்கண்) சேர்ந்தவர், காசியில் கி.பி 447ல் முக்தியடைந்தார்.
22. ஸ்ரீ போதேந்திரசரஸ்வதி:-
மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர், ஜகந்நாத க்ஷேத்ரத்தில் கி.பி 481ல் முக்தியடைந்தார்.
23. ஸ்ரீசச்சித் சுகேந்திரசரஸ்வதி:-
ஆந்திரவிலுள்ள ஸ்ரீகாகுலத்தை சேர்ந்தவர், சுப்ரஹமண்ய பக்தர், ஜகந்நாதக்ஷேத்ரமருகில் கி.பி 512ல் முக்தியடைந்தார்.
24. ஸ்ரீசித் சுகேந்திரசரஸ்வதி:-
கர்நாடகத்தை(கொங்கண்) சேர்ந்தவர், இவர் கொங்கணத்திலேயே வாழ்ந்தார், ரத்னகிரியில் கி.பி 527ல் முக்தியடைந்தார்.
25.ஸ்ரீசச்சிதாநந்த கணேந்திரசரஸ்வதி:-
ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர், கோகர்ணத்தில் கி.பி 548ல் முக்தியடைந்தார்.
26. ஸ்ரீப்ரஞான கணேந்திரசரஸ்வதி:-
பெண்ணாற்றங்கரையை சேர்ந்த ஊர், காஞ்சியில் கி.பி 565ல் முக்தியடைந்தார்.
27. ஸ்ரீசித் விலாசேந்திரசரஸ்வதி:-
ஹஸ்தகிரியை சேர்ந்தவர் (ஆந்திராவிலுள் ளது), காஞ்சியில் கி.பி 577ல் முக்தியடைந்தார்.
28. ஸ்ரீமஹாதேவ வேலேந்திரசரஸ்வதி:-
ஆந்திராவிலுள்ள பத்ராசலத்தை சேர்ந்தவர், கி.பி 601ல் காஞ்சியில் முக்தியடைந்தார்.
29. பூர்ண போதேந்திரசரஸ்வதி:-
காஞ்சியில் கி.பி 618ல் முக்தியடைந்தார்.
30. ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி:-
காஞ்சியில் கி.பி 655ல் முக்தியடைந்தார்.
31. ஸ்ரீ ப்ரம்மாநந்த கணேந்திரசரஸ்வதி:-
கடிலம் நதியிலுள்ள கிரமாத்தை சேர்ந்தவர், காஷ்மீர மன்னால் போற்றப்பட்டவர், காஞ்சியில் கி.பி 668, முக்தியடைந்தார்.
32. ஸ்ரீசிதாநந்த கணேந்திரசரஸ்வதி:-
காய்ந்த சருகுகளை உண்டே வாழ்ந்தவர், கி.பி 672ல் காஞ்சியில் முக்தியடைந்தார்.
33. ஸ்ரீ சச்சிதாநந்தேந்திரசரஸ்வதி:-
ஆந்திராவை சேர்ந்தவர், கி.பி 692ல் முக்தியடைந்தார்.
34. ஸ்ரீ சந்திரசேகரேந்திரசரஸ்வதி:-
வேகவதி நதிக்கரையிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர், காஞ்சியில் கி.பி 710ல் முக்திய டைந்தார்.
35. ஸ்ரீசித் சுகேந்திரசரஸ்வதி:-
வேதாசலத்தை சேர்ந்தவர், சஹ்யமலையில் கி.பி 737ல் முக்தியடைந்தார்.
36. ஸ்ரீசித் சுகாநந்தேந்திரசரஸ்வதி:-
பாலாற்றங்கரையை சேர்ந்த கிராமம், கி.பி 758ல் கஞ்சியில் முக்தியடைந்தார்.
37. ஸ்ரீவித்யா கணேந்திரசரஸ்வதி:-
சிதம்பரத்தில் கி.பி 795ல் முக்தியடைந்தார்.
38. ஸ்ரீஅபிநவ சங்கரேந்திரசரஸ்வதி:-
சிதம்பரத்தை சேர்ந்தவர், எல்லோராலும் போற்றப்பட்டவர், தர்க்க சாஸ்திரத்தில் வல்ல வர், காஷ்மீரநாட்டில் பீடமேறியவர், கி.பி 840ல் இமாலயத்தில் (ஆத்ரேய மலையில்)முக்தி யடைந்தார்.
39. ஸ்ரீ சத்சித் விலாசேந்திரசரஸ்வதி:-
கி.பி 873ல் காஞ்சியில் முக்தியடைந்தார்.
40. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:-
கர்நாடகத்தை சேர்ந்தவர், கி.பி 915ல் முக்தியடைந்தார்.
41. ஸ்ரீ கங்காதரேந்திரசரஸ்வதி:-
கர்நாடகத்தை சேர்ந்தவர், கி.பி 950ல் காஞ்சியில் முக்தியடைந்தார்.
42. ஸ்ரீ ப்ரம்மாநந்த கணேந்திரசரஸ்வதி:-
கி.பி 978ல் காஞ்சியில் முக்தியடைந்தார்,
43. ஸ்ரீஆனந்த கணேந்திரசரஸ்வதி:-
துங்கபத்திரா தீரத்தை சேர்ந்தவர், காஞ்சியில் கி.பி 1014ல் முக்தியடைந்தார்.
44. ஸ்ரீபூர்ண போதேந்திரசரஸ்வதி:-
கர்நாடகத்தை சேர்ந்தவர், கி.பி 1040. காஞ்சியில் முக்தியடைந்தார்.
45. ஸ்ரீபரம சிவேந்திரசரஸ்வதி:-
காஞ்சியில் கி.பி 1061ல் முக்தியடைந்தார்.
46 ஸ்ரீசந்திரானந்த போதேந்திர ஸ்ரஸ்வதி:-
கதாசரித சாகரத்தை எழுதியவர், கி.பி 1098ல் அருணாசலக்ஷேத்ரத்தில் முக்தியடைந்தார்.
47. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி:-
மிகவும் போற்றப்பட்டவர், அருணாசல க்ஷேத்திரத்தில் கி.பி 1166ல் முக்தியடைந்தார்.
48. ஸ்ரீஅத்வைதாநந்த போதேந்திர சரஸ்வதி:-
பெண்ணாற்றங்கரையை சேர்ந்தவர், கி.பி 1200ல் சிதம்பரத்தில் முக்தியடைந்தார்.
49. ஸ்ரீமஹா தேவேந்திரசரஸ்வதி:-
தஞ்சாவூரை சேர்ந்தவர், கடில தீரத்தில் கி.பி 1247ல் முக்தியடைந்தார்.
50. ஸ்ரீசந்திர சூடேந்திரசரஸ்வதி:-
இவரும் கடில நதிதீரத்தில் கி.பி 1297ல் முக்தியடைந்தார்.
51. ஸ்ரீவித்யா தீர்த்தேந்திரசரஸ்வதி:-
பில்வாரண்யத்தை சேர்ந்தவர், கி.பி 1385ல் இமாலயத்தில் முக்தியடைந்தார்.
52. ஸ்ரீ சங்கராநந்தேந்திரசரஸ்வதி:-
திருவடைமருதூரை சேர்ந்தவர், கி.பி 1417ல் காஞ்சியில் முக்தியடைந்தார்.
53. ஸ்ரீபூர்ணாநந்த சதாசிவேந்திர சரஸ்வதி:
-நாகாரண்யத்தை சேர்ந்தவர், கி.பி 1498ல் காஞ்சியில் முக்தியடைந்தார்.
54. ஸ்ரீவ்யாசாசல மஹாதேவேந்திரசரஸ்வதி:-
காஞ்சியை சேர்ந்தவர், கி.பி 1507ல் வ்யாசா சலத்தில் முக்தியடைந்தார்.
55. ஸ்ரீசந்திர சூடேந்திரசரஸ்வதி:-
தென்னாற்காடு மாவட்டைத்தை சேர்ந்தவர், கி.பி 1524ல் காஞ்சியில் முக்தியடைந்தார்.
56. ஸ்ரீசர்வக்ஞ சதாசிவபோதேந்திரசரஸ்வதி:-
வடபெண்ணாற்றங்கரையை சேர்ந்தவர், கி.பி 1539ல் ராமேஸ்வரத்தில் முக்தியடைந்தார்.
57. ஸ்ரீ பரமசிவேந்திரசரஸ்வதி:
பம்பாதீரத்தை சேர்ந்தவர், மஹான் சதா சிவப்ரம்மேந்திராளின் குரு, கி.பி 1586ல் திருவெண்காட்டில் முக்தியடைந்தார்.
58. ஸ்ரீஆத்ம போதேந்திரசரஸ்வதி:-
விருத்தாசலத்தை சேர்ந்தவர், இவர் சதா சிவப்ரம்மேந்திராளை குருரத்னமாலிகாவை எழுத சொன்னவர், கி.பி 1638ல் தென்பெண் ணாற்றங்கரையில் முக்தியடைந்தார்.
59. ஸ்ரீபகவன்நாம போதேந்திரசரஸ்வதி:-
காஞ்சியை சேர்ந்தவர், நாமசங்கீர்த்தனத்தின் மகிமையை எடுத்துரைத்தவர், கி.பி 1692ல் கோவிந்தபுரத்தில் (கும்பகோணமருகில்) முக்தியடைந்தார்.
60. ஸ்ரீஅத்வைதாத்ம ப்ராகசேந்திரசரஸ்வதி:-
கி.பி 1704ல் காஞ்சியில் முக்தியடைந்தார்.
61. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:-
கி.பி 1746ல் திருவொற்றியூரில் முக்தியடைந்தார்.
62. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி:-
இவர் காலத்தில் தான் போரினால். மடத்தை கும்பகோணத்திற்கு மாற்றப்பட்டது, கி.பி 1783ல் கும்பகோணத்தில் முக்தியடைந்தார்.
63. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:-
கும்பகோணத்தை சேர்ந்தவர், கி.பி 1813, கும்பகோணத்தில் முக்தியடைந்தார்.
64. ஸ்ரீ சந்திரசேகரேந்திரசரஸ்வதி:-
இவர் கோவிந்த தீக்ஷதர் வம்சத்தை சேர்ந்தவர், கி.பி 1851ல் கும்பகோணத்தில் முக்தியடைந்தார்.
65. ஸ்ரீசுதர்சன மஹாதேவேந்திரசரஸ்வதி:-
திருவடைமருதூரை சேர்ந்தவர், கி.பி 1891ல் இளையாத்தங்குடியில் முக்தியடைந்தார்.
66. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி:-
உடையம்பாக்கத்தை சேர்ந்தவர், கி.பி 1907ல் கலவையில் முக்தியடைந்தார்.
67. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:-
ஏழுநாட்களே பீடத்தில் இருந்தார், கி.பி 1907ல் கலவையில் முக்தியடைந்தார்.
68. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி (மஹா பெரியவா):
தென் ஆற்காடு மாவட்டமான விழுப்புரத்தில் மே 20, 1894ஆம் ஆண்டு அனுராதா விண்மீனில் கன்னட இசுமார்த்த பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்டபெயர் சுவாமிநாதன் என்பதாகும். காஞ்சியில் சனவரி மாதம் 8ம்நாள் 1994ல் முக்தியடைந்தார். இவர் சரியாக 100 வருடங்கள் வாழ்ந்து தனது முக்தியடைந்தவராவார்.
69. ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி:
திருவாரூர் மாவட்டம், இருள்நீக்கி என்ற கிராமத்தில் 1935 ஜூலைமாதம் 18ம் தேதி அன்று, சுப்ரமணியம் மகாதேவன் என்ற இயற்பெயரைக் கொண்டு பிறந்தார். ஜெயேந்திர சரஸ்வதி, தனது 19 வது வயதில், 22 மார்ச் 1954 அன்று காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்றார். பின்னர் 40 ஆண்டுகள் கடந்து, சந்திரசேகர சரசுவதியின் மறைவிற்குப் பின் 1994ம் ஆண்டில், காஞ்சி சங்கர மடத்தின் 69 வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார். 2018 பிப்ரவரிமாதம் 28ம் தேதி முக்தியடைந்தார்.
70. ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி:
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள “தண்டலம்“ எனும் கிராமத்தில், 1969 ஆம் ஆண்டு, மார்ச் 13 இல் பிறந்தவர். சங்கரநாராயணன் என்ற இயற்பெயருடன் திகழ்ந்தவர் 1983 ஆம் ஆண்டு மே மாதம் 29 இல் தனது 14 ஆவது வயதில், அவரது முன்னைய 69 ஆவது சங்காரச்சார்யர் (குரு) இந்து சமயத்தின் காஞ்சி காமகோடி பீடாதிபதியான, செயந்திர சரசுவதி என்பவரின் (வாரிசாக) 70 ஆவது இளைய பீடாதிபதியாகப் பட்டம் ஏற்றுக்கொண்டார். 2018 பிப்ரவரி மாதம் 28ம் தேதி ஜெயேந்திரரின் முக்திக்குப்பின் 1 மார்ச் 2018ம் தேதி சங்கரமடத்தின் தலைமைப் பொறுப்பேற்றுள்ளார்

"உனக்கு ஏது இவ்வளவு பணம்?"...தன்மேல் நாவிதருக்கு உள்ள பக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்றே அந்தக் கேள்வியைக் கேட்ட மகாபெரியவா.

"உனக்கு ஏது இவ்வளவு பணம்?"...தன்மேல் நாவிதருக்கு உள்ள பக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்றே அந்தக் கேள்வியைக் கேட்ட மகாபெரியவா.

( "சாமி..எல்லோரையும் போல உங்களுக்கு என்னால ஏதும் கொண்டுவந்து தரமுடியலையேன்னு, ரொம்ப வருத்தமா இருந்துச்சுங்க.அதனால என்னோட குடிசையை வித்துட்டேங்க.!" -நாவிதரின் பதில். 

தொகுப்பு-வெ-ஐஸ்வர்யா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-. குமுதம் லைஃப் 


மகா பெரியவா ஆந்திரா பக்கம் பாதயாத்திரை செய்து கொண்டிருந்த சமயம் அது அப்போது ஒருநாள் பௌர்ணமி வந்தது.
சன்யாச தர்மப்படி பௌர்ணமி நாளில் வபனம் (க்ஷவரம் செய்து முடிகளை அகற்றுவது) செய்து கொள்ள வேண்டும். ஆசார்யா யாத்திரை செய்து கொண்டிருந்ததால், தெலுங்கரான நாவிதர் ஒருவரை அதற்காக அழைத்துக் கொண்டு வந்தார்கள்..
ஆந்திராவில் சுற்றுவட்டாரத்திலேயே மகாபெரியவா,மேலும் சில மாதங்கள் யாத்திரை செய்ததால், அடுத்தடுத்த பௌர்ணமி நாட்களிலும் அதே நாவிதர் வந்து வபனம் செய்தார். பிறகு ஒரு கட்டத்தில் அந்த நாவிதர் காஞ்சி மடத்திற்கு அழைத்து வரப்பட்டு,பெரியவா சேவைக்கு அமர்த்தப்பட்டார். ஆரம்பத்தில் மகாபெரியவாளின் மகத்துவம் எதுவும் அவருக்குத் தெரியாது. யாரோ ஒரு சன்யாசிக்குத்தான் வபனம் செய்கிறோம் என்பதுபோல்தான் அவர் இருந்தார்
ஆனால், நாளாக நாளாக எத்தனை எத்தனையோ ஜன்மாக்களில் செய்த பலனால், மகானைத் தொட்டுத் திருத்தொண்டு செய்யும் பாக்கியம் கிடைத்திருக்கிறது என்று உணர்ந்து கொண்ட அவர், அதனால் பூரண பக்தியோடு வந்து, மிகுந்த சிரத்தையோட பணி செய்தார்.
அப்படி வந்த சமயங்களில் எல்லாம், பக்தர்கள் பலரும் பரமாசார்யாளுக்கு பலப்பல காணிக்கைகளைத் . தருவதைப் பார்த்தார். மகாபெரியவாளுக்கு தானும் ஏதாவது தரவேண்டும் என்ற ஆசை, அவருக்குள் தோன்றி வேகமாக வளரத் தொடங்கியது.
மகா பெரியவாளுக்கு ஏழ்மையான இந்த பக்தர் எதைக் கொண்டு வர முடியும்? காவியேறிய துணியில் நிறைய புற்று மண்ணை மூட்டையாகக் கட்டி,அதையும் மாங்குச்சியையும் (இவை இரண்டும் மகான் உபயோகிப்பவை) ஒவ்வொரு முறையும் எடுத்துவருவார். ஆசார்யா முன் அதை சமர்ப்பித்துவிட்டு, தன் பணியைச் செய்துவிட்டு விடைபெறுவார்
பெரியவா முன் அவர் விரும்பாமலேயே பக்தர்கள் சமர்ப்பிக்கும் பழங்கள், பாதாம், முந்திரி,பிஸ்தா போன்றவை, விலை உயர்ந்த சால்வைகள்,தங்க நாண்யங்கள், இத்யாதி, இத்யாதியான பலப்பல கணிக்கைகளுக்கு இடையே, நாவிதர் சமர்ப்பித்துச் செல்லும் அழுக்கு மூட்டையும் இருக்கும் .பக்தியோட அளித்த அதுவே மகாபெரியவாளுக்கு மகத்தான காணிக்கையாகத் தெரியும்.
ஆனால், நாவிதர் அதனை உணரவில்லை. வழக்கம்போல் ஒரு பௌர்ணமியன்று வந்தவர், அன்று புற்றுமண் வைத்து தட்டில்,விலை உயர்ந்த பழங்கள், தேங்காய், திராட்சை என பலப்பல காணிக்கைகளோடு, கொஞ்சம் ரூபாய் நோட்டுக்களையும் வைத்து எடுத்து வந்து சமர்ப்பித்தார்.
வழக்கம்போல்,மடத்து தொண்டர் ஒருவர், அந்த மூங்கில்தட்டை எடுத்துச் சென்று மகான் முன் சமர்ப்பித்தார். இருந்ததை இருந்தவாறே அறியும் மகானுக்கு அது யார் தந்தது என்று தெரியாதா என்ன? இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், " இன்னிக்கு அந்த தெலுங்கர் வரலையோ?" என்று அறியாதவர் போல கேட்டார்
அவர்தான் கொண்டுவந்து இதை சமர்ப்பித்தார் என்று தொண்டர்கள் சொல்ல, கொஞ்சம் தொலைவில் நின்றிருந்த அந்த நாவிதரைப் பார்த்தார் மகான்."உனக்கு ஏது இவ்வளவு பணம்?"...தன்மேல் அவருக்கு உள்ள பக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்றே அந்தக் கேள்வியைக் கேட்டார்
"சாமி..எல்லோரையும் போல உங்களுக்கு என்னால ஏதும் கொண்டுவந்து தரமுடியலையேன்னு, ரொம்ப வருத்தமா இருந்துச்சுங்க.அதனால என்னோட குடிசையை வித்துட்டேங்க.!"
"குடிசைன்ன அதுல நீ மட்டும்தான் இருந்தியோ?" மகானின் குரலில் கனிவு தெரிந்தது.
"இல்லீங்க,பொண்டாட்டி,குழந்தைகளோடதான் இருக்கேன்..அவங்களைத் தெருவுல ஒரு மூலையில இருக்கச் சொல்லிட்டு வந்திருக்கேன்க,!"
அவர் சொல்லி முடிக்க, அங்கிருந்த மற்ற பக்தர்களுக்கு, மகாபெரியவா மீது நாவிதர் வைத்திருந்த பரிபூரண பக்தி தெரியவந்தது. அவரது திருப்பணிக்கு நிகராக தாங்கள் எதையுமே செய்ய முடியாது என்று புரிந்து கொண்ட அவர்களின் நெஞ்சம் நெகிழ்ந்து கண்களில் நீர் நிறைந்தது.
குடும்பத்தையே தெருவில் நிறுத்திவிட்டு உடைமைகள் அத்தனையையும் தன் மீது கொண்ட பக்திக்காக சமர்ப்பித்து நிற்கும் நாவிதரின் பக்தி மேன்மையை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக மகான் நடத்திய நாடகம்தான், "தெலுங்கர் வரலையா?" என்று அவர் கேட்டது என்பதைப் புரிந்து கொண்ட எல்லோரும், ஜயஜய சங்கர, ஹரஹர சங்கர என்று குரல் எழுப்பினார்கள்.
அடியார்க்கு வீடுபேறு தரவல்ல ஈசனின் அம்சமான மகாபெரியவா, தன்னிடம் பரிபூரண பக்தி கொண்டிருந்த அந்த நாவிதருக்கு நிரந்தரமானதொரு வீட்டைக் கட்டித் தரும்படி உத்தரவிட்டார். அது, கடவுளின் குரலாகவே கேட்டது அந்த நாவிதருக்கு.

Friday, 19 June 2020

Kashmir and Kanchi Kamakoti Pitham through the ages

Kashmir and Kanchi Kamakoti Pitham through the ages
Bhagavan Sadashiva, from His Guru svarupa of Dakshinamurti, was born about two thousand and five hundred years ago in the village Kaladi in Kerala. He took this avatara seeing dharma on the descent everywhere due to the increase of adharma, and thereby restored dharma to its former strength. To ensure the continued protection of this dharma parampara, He established four pitha-s in the four directions of Bharata and appointed four of His shishya-s as the Acharya-s there. He Himself, however, stayed at the Sharada Matha in Kanchi as the Acharya of the Sarvajna Pitha which derives its spiritual power directly from Devi Kamakshi, who is also called Kamakoti. He also attained Siddhi at Kanchi in front of Devi Kamakshi. These facts are given to us by respected texts such as Shiva Rahasya and all noble-minded souls have accepted this.
Kanchi is also known as Southern Kashmir. Just as the Veda Vidya-s are excellently preserved in Kanchi, even in Kashmir it was previously so. Thus there is much relating Kanchi, and especially the Kanchi Kamakoti Pitha, to Kashmir. Some relevant details are given here as far as we were able to collect from different works.
 
There is no doubt that the first Acharya of the Kamakoti Pitham Shrimad Adya Shankara Bhagavatpada (509-477 BCE) has been to Kashmir. The Kashmir king Gopaditya (417-357 BCE) built a temple for Shri Shankara Bhagavatpada in Shrinagar in view of the fact that the Acharya had been to Kashmir only a short time before his rule. (Ref: A Short History of Kashmir, Gwasha Lal, 1932.)

Shri Sureshvaracharya who is respected as the second Kamakoti Acharya and supervised the Pithadhipatya from 477 to 407 BCE was born in Kashmir. Punya Shloka Manjari which is summarizes the lives of the Acharya-s of the Kamakoti Pitha says about Shri Sureshvara: “gauḍaḥ kāśmīrajanmā”. Of the five Gauda-s – Sarasvata, Kanyakubja, Gauda, Utkala and Maithila – He was a Kanyakubja Gauda in His purvashrama i.e. before sannyasa. The father of Shri Sureshvara, Himamitra, was a Rajaguru of the Kashmir king.

The sixteenth Acharya Shrimad Ujjvala Shankarendra Sarasvati (329-366 CE), after having curbed those hindering Sanatana Dharma during his tenure as Pithadhipati, attained Siddhi in Kashmir. Punya Shloka Manjari states: “vimatān āmūlam unmūlayan ākāśmīram agān-mahāyatir iti khyātyojjvalaḥ śaṅkaraḥ”. His Siddhi place in Kashmir was called Kalapura. It came to be known as Ujjvala Mahayati Pura because of His Siddhi there. Punya Shloka Manjari states this as: “apa-harṣa-śokam ajaram brahmaiva yaḥ śāsvataṃ kāśmīreṣu kalāpure yad adhunā (a)pyākhyāyate (a)syākhyayā”.

There is a stotra in praise of the Acharya Parampara named Guru Ratna Mala authored by the great Yogi Sadashiva Brahmendra. Its commentary Sushama states regarding the seventeeth Acharya Shrimad Gauda Sadashivendra Sarasvati (366-374 CE) that He was the son of a Kashmir minister named Deva Mishra Sharma. This Deva Mishra was excessively attached to the Jaina religion. However, the Acharya even as a child strongly asserted the greatness of the Sanatana Dharma and the Advaita Siddhanta. Enraged by this, the Jaina-s threw the child into the Sindhu river. The river, however, bore Him with affection on a lotus leaf and carried Him to one Bhurivasu Sharma, resident of Pushpapura, who was in desire of a son and had descended into the river for his ablutions. Bhurivasu Sharma then brought up the child. Later the Acharya received sannyasa from Acharya Ujjvala Shankara when He came to Kashmir. After the Siddhi of the Guru, He taught the Advaita Vedanta Brahma Sutra Bhashya to His shishya-s about fifty times in just eight years, and later attained Siddhi at Tryambakeshvara in Maharashtra.

The eighteenth Acharya Shrimat Surendra Sarasvati (374-384 CE) visited the court of the Kashmir king Surendra. There was a notorious hedonist there named Durdidivi who was spreading wicked practices. The Acharya defeated him in debate. The Deva Guru Brihaspati by His yogic powers then came there in the form of a Charvaka and argued in support of Durdidivi (in order to bring out the greatness of the Acharya). The Acharya defeated even Him, and thus re-established Sanatana Dharma and Advaita. The king Surendra then expressed his respect to the Acharya and donated land to the Shrimatha.

The relation of the twentieth Acharya Shrimad Muka Shankarendra Sarasvati (397-436 CE) is as follows. A certain Brahmana brahmachari by name Matrgupta who was also a poet was doing services during the time of puja to the Acharya. He was excessively proud of his ability as a poet. To rid him of this pride, the Acharya made the caretakers of the horses and elephants of the Shrimatha, by name Ramila and Menthaka, poets by His graceful glance alone. Upon seeing this, Matrgupta realized that worldly skills like poetry can be attained or lost in a split second.

In those days, Harsha Vikramaditya was the Chakravarti of Ujjaini and bore high respect for the Acharya. To his court, the Acharya sent Matrgupta as court-poet. The king had much affection for Matrgupta. In the meanwhile, Hiranya, the Kashmir king of that time, by name passed away without issue. His brother was Toramana, who also met with an untimely death. Toramana’s wife Anjana was pregnant at that time, and she took refuge in a potter’s house. There she gave birth to a son by name Pravarasena.

Upon Hiranya’s death, his ministers requested the Ujjaini Chakravarti Harsha Vikramaditya to ensure the security of the Kashmir kingdom. The Chakravarti sent Matrgupta – as a fitting honour in recognition of the excellence of his poetry – to be the Kashmir king. In accordance with this Matrgupta ruled there for five years. Upon hearing of Harsha Vikramaditya’s death, Matrgupta became disinterested in worldly matters. Making Pravarasena the Kashmir king, as he was the nephew of the previous king Hiranya and hence had the right to the throne, Matrgupta returned to his Guru Shri Muka Shankara and took sannyasa.

In those days, those wishing to go on pilgrimage to the holy kshetra-s in Kashmir found it very difficult because of the dense forests of the mountainous Kashmir region. Seeing this, the Acharya was filled with compassion for the pilgrims and had Pravarasena refine the forest path into a highway and named it Sushama. This fact had been mentioned by all those who had received the anugraha of the Acharya such as Matrgupta, Ramila, Menthaka and Pravarasena in their respective works.

We come to know of these details from Sushama, the commentary of Guru Ratna Mala, and from the works of the well-known Andhra research scholar Kota Venkatachalam. The twenty-first Acharya Shrimad Jahnavi Chandrachudendra Sarasvati (436-446
CE) was, as mentioned before, known previously as Matrgupta. After having ruled over Kashmir for sometime, He took sannyasa. Spending ten years in penance on the banks of the Ganga, He attained Siddhi there.

The thirty-first Acharya Shrimat Sheelanidhi Brahmanandaghanendra Sarasvati (654-667 CE) was object of the devotion of the Brahmana Kashmir king Lalitaditya. This king conquered all of Bharata Varsha. In the course of his travels of conquest, he came to Kanchi, and having reached the Kamakoti Pitha, he stayed there for quite some time in the seva of the Acharya. Mahakavi Bhavabhuti had mentioned this in his work named Mahapurusha Vilasa. This we come to know from Guru Ratna Mala and other such works.

The thirty-second Acharya Shrimat Chidanandaghanendra Sarasvati (667-671 CE) was also highly respected by the same Lalitaditya. After His Guru having attained Siddhi, this Acharya had Lalitaditya establish an annadanashala in Kashmir after the purvashrama name of His Guru Jyeshtha Rudra. In that annadanashala food was provided for lakhs of pilgrims. The Acharya also had Lalitaditya place on the Karnataka throne the orphaned son of the former queen of that kingdom who had lost her life during his conquest.

When the thirty-fourth Acharya Shrimat Chandrashekharendra Sarasvati (691- 709 CE) came to Kashmir he defeated an atheist by name Chakuna who, in the name of spreading the Jaina religion was obstructing the Sanatana Dharma. Thus the Acharya re- established the Shastric Dharma in Kashmir.

In the days of the thirty-eighth Acharya Shrimad Dhira Shankarendra Sarasvati better known as Abhinava Shankara (788-839 CE), the durmata-s of mleccha-s (the malpractices of those devoid of Sanatana Dharma) had spread all over Bharata. In the course of His vijaya yatra-s (tours of victory over adharma) as if another avatara of Shri Adya Shankara, He re-established Sanatana Dharma and Advaita Siddhanta everywhere. In Kashmir in those days there was a great pandita by name Bhattodbhata who was undefeatable, having defeated eight other great pandita-s. The Acharya, however, upon coming to Kashmir, won over Bhattodbhata in debate, and ascended the Sarvajna Pitha in Kashmir in front of the Vagdevi Sharada. This is mentioned in Guru Ratna Mala, Sushama and many works such as Shankarendra Vilasa and Sadguru Santana Parimala quoted by Sushama. This Acharya attained Siddhi in the Himalayas.

During the reign of the forty-sixth Acharya Shrimat Sandrananda Bodhendra Sarasvati (1060-1097 CE) mleccha-s were (once more) causing trouble to the Sharada Shrimatha. In accordance with the Acharya’s wish to protect those around Him, the minister of the Kashmir king Kalasheshvara drove away the trouble-making mleccha-s. This Acharya attained Siddhi at Arunachala (Tiruvannamalai in Tamil Nadu).

In the time of the forty-seventh Acharya Shrimat Chandrashekharendra Sarasvati (1097-1165 CE), there was in Kashmir a Jain king named Kumarapala. He was misguided by the Jaina leader Hemacharya. The Acharya, upon visiting that Kashmir king’s court, clearly explained the Advaita Tattva, defeated Hemacharya in debate and re- established dharma in Kashmir (once more).

The forty-eighth Acharya Shrimad Advaitananda Bodhendra Sarasvati (1165- 1199 CE) had debated with, won over and were highly respected by the well-known Kashmiri Shaivaite Abhinava Gupta.

We have given a few examples of the various relations that have existed between Kashmir and the Kanchi Kamakoti Pitha as is learnt from the works such as Guru Ratna Mala, Sushama and Punya Shloka Manjari. It is highly likely that more research will uncover many more such relevant facts.
                                                                           -0-0-0
 
Sourece: www.kamakoti.org

Friday, 5 June 2020

சொல்லிலும், செயலிலும் சுய ஒழுக்கம் காஞ்சி விஜயேந்திரர் அறிவுரை


''ஹிந்து மதத்தில் சுய ஒழுக்கம் மிக முக்கியம். நாம் சொல்லிலும், செயலிலும், சிந்தனையிலும் சுய ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்,'' என, காஞ்சி விஜயேந்திரர் வலியுறுத்தினார்.

அவர் கூறியுள்ளதாவது:மனிதர்கள் அமைதி, ஒற்றுமையுடன் வாழ கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பக்தி அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. பக்தர்களின் கூட்டு முயற்சியால் கோபுரங்கள் கட்டி எழுப்பபட்டுள்ளன.

இவை ஒற்றுமையின் சின்னமாக திகழ்கின்றன.தர்ம காரியங்களை உணர கோவில்கள் உதவுகின்றன. தர்மம், பக்தி, வழிபாடு, இயற்கைக்கு உதவுதல், இரக்கம், அன்பு, கருணை, நல்ல வார்த்தைகள் பேசுதல் போன்றவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.பெற்றோரே, நமக்கு முதல் குரு. அவர்களை மதிப்பதன் மூலம், தர்ம சிந்தனைகள் வளரும். தாய், தந்தையிடம் கடவுளின் கருணையை உணரலாம். உடல்ரீதியாக நம்மை வளர்க்கும் இவர்கள், மூத்தோரை மதித்தல், விருந்தோம்பல் போன்ற தர்ம காரியங்களையும் சொல்லித் தந்து முழு மனிதர்களாக உருவாக்குகின்றனர்.ஹிந்து மதத்தில் சுய ஒழுக்கம் முக்கியம். இது ஆத்ம சக்தியை வளர்க்க உதவும். சொல்லிலும், செயலிலும், சிந்தனையிலும் சுய ஒழுக்கத்துடன் இருக்க முனிவர்களும், சித்தர்களும் அறிவுறுத்திஉள்ளனர்.

கடவுளின் உருவத்தை நம் இதயத்தில் வைத்து பாதுகாக்க பக்தி உதவுகிறது. நகரங்களில் வாழ்ந்தாலும், பழைய கலாசாரத்தை மறந்து விடாமல் அவற்றை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு ஹிந்துவும் கடவுளின் பெயரை அன்றாடம் உச்சரிப்பதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

நம் வீட்டிற்கு அருகில் வளரும் சிறிய மலர்களை, கடவுளின் பாதங்களுக்கு காணிக்கையாக்கலாம்.கோவில்களில் உபன்யாசம், சிவபுராணம், விநாயகர் பாடல், அபிராமி அந்தாதி போன்றவற்றை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். பாரம்பரிய உடை, நெற்றியில் திலகத்துடன் கோவிலுக்கு வர வேண்டும். கோவில்களில் பக்தி மணம் வீச வேண்டும். ஹிந்து தர்மங்களை முழு விசுவாசத்துடன் பின்பற்றி கடவுளின் ஆசி பெறவேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

5th June 2020 - World Environment Day



"பரமேஸ்வரன் அனுக்ரஹத்தாலே பார்வை கிடைக்கும். இல்லையா?"


சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பொறியாளர், எல்லாப் புலன்களும் ஒழுங்காக இருந்ததால், படித்துப் பட்டம் பெற்று பதவியும் பெற்றார். இடையில் ஓர் இடி. பார்வை போய்விட்டது; மருத்துவர்கள் மருந்து போட்டார்கள். ஆனால்,போன பார்வை மருந்துக்குக் கூட வரவில்லை. 

மகாஸ்வாமிகள் சென்னையில் முகாம். பொறியாளாரால் சுவாமிகளைப் பார்க்க முடியாது தான். ஆனால்,சுவாமிகளின் தெய்வீகக் குரலை கேட்க முடியுமே? செவிப்புலன் பழுதபடவில்லையே? அத்துடன், சுவாமிகளால் இவர் பார்க்கப்பட முடியும்... 

நாள் தவறாமல், ஆறுமாத காலம், பெரியவாள் பூஜைக்குச்சென்று கொண்டிருந்தார். பொறியாளர் வரிசையில் நின்று,தினமும் தீர்த்தப் பிரசாதம் பெற்றுக் கொள்வார். உதவிக்காக உடன் வருபவர்கள், 'பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்' என்று மெய்யுருகப் பிரார்த்திப்பார்கள். 

பேசும் தெய்வம்-மற்ற எல்லா அடியார்களுடனும் பேசும் தெய்வம்-இவருக்கு மட்டும் பதில் சொன்னதில்லை; வேதனை, இல்லை, பரிசோதனையா? பத்து நாட்கள் பயங்கரமாகப் போர் செய்யாமலே இராவணனை இராமபிரான் மாய்த்திருக்க முடியாதோ? 

ஆனால், அவனுக்கு உயிர் போகும் நொடி வரும்வரை,காலத்தை கடத்த வேண்டியிருந்தது. 

கட்டுமானப் பொறியாளருக்குக் கண் பார்வை கிடைக்கவேண்டிய புண்ணிய தருணம் வந்து விட்டது போலும். 

ஒருநாள், தேவார இசைப்பணிபுரியும் காஞ்சி வரதஓதுவார்என்ற அடியார், பெரியவா தரிசனத்துக்கு வந்திருந்தார். பார்வையில்லாத பொறியாளரை அருகில் வைத்துக்கொண்டு, ஓதுவாருடன் ஒரு சம்பாஷணை. 

பெரியவா கேள்வி: சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குக்கண்பார்வை ஏன் போனது?
ஓதுவார் விடை: இறைவனுக்குக் கொடுத்திருந்த வாக்கைத் தவறினார்.
"எந்த ஊரில் பார்வை இழந்தார்?" 

"திருவொற்றியூர் காலடிப்பேட்டை." 

"பிறகு என்ன செய்தார்?" 

"அவ்விடத்திலிருந்து, திருமுல்லைவாயில் சென்று, 'அமுக்கு மெய்கொடுதிருவடி அடைந்தேன்' என்ற பதிகம் பாடி விண்ணப்பம் செய்தார்.' 

"அடுத்ததாக என்ன செய்தார்?" 

"திருவெண்பாக்கம் என்ற தலத்துக்குச் சென்று, பதிகம் பாடினார். இறைவன் சிறிது கருணை காட்டி ஊன்றுகோல் அருளினார்." 

"அப்புறம்?" 

"காஞ்சிபுரம் சென்று ஏகம்பனை வேண்டினார். ஆலந்தான் உகந்து..என்ற பதிகம் பாடி, இடது கண் பார்வை பெற்றார். அருகிலேயுள்ள ஓணக்காந்தன் தளி திருக்கோவிலுக்குச் சென்று, பொருள் பெற்றார். பின்னர் காஞ்சிப் பகுதியிலேயே உள்ள திருமேற்றள அனேகதங்காவதம் சென்று கயிலயங்கிரி நாதனைத் துதித்தார். 

"அடுத்து?" 

"திருவாரூர் சென்றார். மீளா அடிமை... என்று தொடங்கும்பதிகம் பாடி, புற்றிடங்கொண்டானை வழிபட்டு, உருகி, உருகிவேண்டினார். வலதுகண் பார்வையும் பெற்றார்...." 

மௌனம். 

"பரமேஸ்வரன் அனுக்ரஹத்தாலே பார்வை கிடைக்கும். இல்லையா?" 

"ஆமாம்" 

பொறியாளரைக் கூப்பிட்டு,'சுந்தரமூர்த்தி சுவாமிகள் போன
ஸ்தலங்களுக்கெல்லாம், இந்த ஓதுவாரையும் அழைச்சிண்டு போ. அந்தந்த ஸ்தலங்களுக்கான பதிகங்களை இவர் பாடுவார். 

"சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்கு ஊன்றுகோல் கொடுத்த ஈஸ்வரன் புரசவாக்கம் கங்காதரேசுவரர் கோவிலில் இருக்கார். முதல்லே,ஓதுவாருடன் போய், அவரை தரிசனம் பண்ணு;அர்ச்சனை செய்... முக்கண்ணன் அருளினால் பார்வை கிடைக்கும்...." 

மகாப்பெரியவாளின் ஆணைப்படி யாத்திரை நடந்தது. 

பெரியவா வாக்குப்படி பலனும் கிடைத்தது.