Wednesday 30 June 2021

ருத்ரம் சமகம் இவற்றின் அற்புத விளக்கமாக ஒரு பெரியவர் கூறுவது

ருத்ரம் சமகம் இவற்றின் அற்புத விளக்கமாக ஒரு பெரியவர் கூறுவது


ருத்ரம் என்னும் துதி யஜுர் வேதத்தில் உள்ளது. இது நமகம், சமகம் என இரண்டு பகுதிகளை உடையது.

இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணறுபவருக்கு இது ஒரு பெரிய பட்டியலைத் தருகிறது.

இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் நல்ல தூக்கத்தையும் தருக என்று இறைவனை வேண்டுவதாகும்.

மேலை நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம் ஆகும்.

பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப் படுகிறார்கள்.

இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் முன்னோர்கள் அழகாக வரிசையாக சமகம் என்னும் பகுதியில் பட்டியல் இட்டுவிட்டார்கள்.

நமகம் என்னும் பகுதியில் "சிவ பெருமானை"

நூற்றுக் கணக்கான பெயர்களால் நமஸ்கரிக்கிறோம்.

இதனால் இதை சத ருத்ரீயம் என்று அழைப்பர்.

சமகம் என்னும் பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் கேட்டாலே போதும்.

அத்தனையும் கிடைத்துவிடும்.

சிவன் கோவில்களில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வார்கள்.

இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் ருத்ர பாராயணம் நடைபெறும்.

நமகம் என்னும் பகுதியில் 194 நம: வரும்

சமகம் என்னும் பகுதியில் 328 சமே வரும்.

நமகம் பகுதியில் சிவனை 300 பெயர்களால் வணங்குகிறோம்.

ருத்ரத்துக்கும் 11 என்ற எண்ணுக்கும் தொடர்பு மிக அதிகம்.

ஏகாதச ருத்ரர்கள் என்று ருத்ரர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுவதால் குறைந்தது 11 தடவையும், அதிகமாக இதன் பல மடங்குகளிலும் பாராயணம் செய்வர்.


ஸ்ரீருத்ரம் 174 ரிக்குகளைக் கொண்டது. இதில் 32 மஹா மந்திரங்கள் இருக்கின்றன.

ருத்ரத்தில் 11 பிரிவுகள் (அநுவாகங்கள்), சமகத்தில் 11 பிரிவுகள் இருக்கின்றன.

ருத்ரத்தின் 11 அநுவாகங்களில் எட்டாவது அநுவாகத்தில்

"நமச்சிவாய" என்ற மஹா மந்திரம் வருவதால் அந்த இடம் வரும் போது முழுக் கவனத்தையும் செலுத்தி உரத்த குரலில் கூறுவர்.

11ஆவது அநுவாகத்தில் மரண பயத்தை நீக்கும் ம்ருயுஞ்ஜய மந்திரம் (ஓம் த்ரயம்பகம் யஜாமஹ) வருகிறது.

ஸ்ரீ ருத்ரத்திற்கு சாயணர், பட்ட பாஸ்கரர், அபிநவ சங்கரர் ஆகிய பெரியோர்கள் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியிருக்கிறார்கள்.

பெரிய புதிர் உலகிலேயே பெரிய கணித வல்லுநர்கள் இந்துக்கள் தான். 

சின்னக் குழந்தை முதல் பெரியோர் வரை தினசரி துதிகளில் கூட “டெசிமல்” முறையை (தசாம்ச) பயன்படுத்தி சூர்ய கோடி சமப் ப்ரபா என்றெல்லாம் வேண்டுவதைக் குறிப்பிட்டிருக்கிறேன்

சமகத்தில் 11ஆவது அநுவாகத்தில் ஒற்றைபடை எண்களாக 33 வரையும் இரட்டைப் படை எண்களாக 44 வரையும் எண்கள் மட்டுமே மந்திரமாக உச்சரிக்கப்படுகின்றன.

இது வரை இதற்கு எத்தனையோ தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்பட்டபோதிலும் ஒன்றுகூட எல்லா எண்களையும் விளக்குவதாக இல்லை.

ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் இப்படி வெறும் எண்களை மட்டுமே மந்திரமாக்கிய இந்தியர்களின் கணிதப் புலமையையும் ஆர்வத்தையும் என்னவென்று புகழ்வது.

உலகில் வேறு எந்த கலாசரத்திலும் இறைவனைத் துதிபாடும் மந்திரங்களில் இப்படி எண்கள் வருவதில்லை.

ஒரு இடம் அல்ல, இரண்டு இடம் அல்ல. உலகின் மிகப் பழமையான சமய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் பெரிய பெரிய எண்கள் வருகின்றன.

வேதங்களின் முழு அர்த்தம் புரியாத வெளிநாட்டுக்காரர்கள் இதற்கு மனம் போன போக்கில் பொருள் செய்திருக்கிறார்கள்.


சங்கத் தமிழ் இலக்கியமோ வேதங்களையும் வேள்விகளையும் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுகிறது!)

வேதங்களைப் பாடிய ரிஷி முனிவர்கள் தாங்கள் ரகசிய மொழியில், சங்கேத மொழியில் பாடுவதை விரும்புகிறோம் என்று பாடுகிறார்கள்.

சங்கத் தமிழ் புலவர்களும் இதை அறிந்து வேதத்துக்கு மறை (ரகசியம்) என்ற அழகிய தமிழ் சொல்லைச் சூட்டியுள்ளனர்.

ஸ்ரீருத்ரத்தின் மகிமை....

சொல்லுக்கு அடங்காதது. வேத மாதாவினாலும் ஓரளவுக்குத்தான்

 ஸ்ரீ பரமேச்வரனை அடையாளம் காட்ட முடியும்.

வேதத்தால் துதிக்கும் போது அவன் எல்லாவற்றையும் வழங்குகிறான்.அவன் எங்கெல்லாம் எந்தெந்த வடிவில் இருக்கிறான் என்ற பெரிய பட்டியலையே தந்துவிடுகின்றது.

*ஸ்ரீ ருத்ரம்.*

எல்லா உலகமும் ஆகி

(“ஜகதாம் பதயே”) இருப்பவன்.

எங்கு தான் இல்லை?இருந்தாலும் ஒன்றொன்றாகச் சொல்லுகிறது வேதம்…

அந்த ஈச்வரன் தான் எல்லா தேவர்களின் இருதயங்களிலும் இருக்கிறான் (“தேவானாம்ஹ்ரிதயேப்ய”)

அப்படி இருந்துகொண்டு வேண்டுவார் வேண்டுவது எல்லாம் தருபவனாக இருக்கிறான்

(“விசின்வத்கேப்யஹா”)

மகான்கள் வடிவிலும் அற்ப சக்தி உள்ளவர்கள் வடிவிலும் விளங்குகிறான்.

சேனைத் தலைவர்களாகவும் சேனைகள் எனவும் இருப்பதை

 (“சேனாப்ய_சேனா_நிப்யச்ச:”) என்கிறது

அதே சமயம் தேர் ஓட்டுபவர் வடிவிலும் (“க்ஷத்ருப்ய:”), தச்சர் வடிவிலும் (“தக்ஷப்ய:”), குயவர் வடிவிலும் (“குலாலேப்ய:”); கருமார் வேடத்திலும் (“கர்மாறேப்ய:”), பறவைகளைப் பிடிக்கும் வேடர் வடிவத்திலும் (“புஞ்சிஷ்டேப்ய:”), மீன் பிடிக்கும் செம்படவ வடிவிலும் (“நிஷாதேப்ய:”) இருக்கிறான்….

சிவ ச்வரூபமோ அலாதியானது.

ஆலகால விஷத்தை உண்ட கண்டம் (“நீலக்ரீவாய”) அதன் மேல் விபூதி பூசப்பட்டு இருக்கிறது (“சிதிகன்டாய”).

ஒரு சமயம் பார்த்தால் நீண்ட ஜடா முடி (“கபர்தினே”) இருக்கிறது.மறு கணம் பார்த்தால் கேசம் நீக்கப்பட்ட ("வ்யுப்தகேசாய”) தலை.

ஆயிரக்கணக்கான கண்கள் (“சகஸ்ராக்ஷாய”), குறுகிய வாமன வடிவுடைய (“ஹ்ரச்வாய்ச வாமனாய்ச”) அவனே, பெரிய வடிவத்துடனும் (“ப்ருஹதே”) தோன்றுகிறான்.பால விருத்த வடிவங்களிலும் காட்சி அளிக்கிறான்.

வேதங்களால் துதிக்கப்படுவனாகவும் (“ச்துத்யாய”), வேத முடிவில் வீற்றிருப்பவனாகவும் (“அவசான்யாய”) விளங்குகிறான்.

ஆகவே தர்மத்தின் வடிவமான பரமேச்வரனைத் தர்ம தேவதையே வாகனமாகத் தங்குகிறது என்பதை, (“பப்லுசாய”) என்ற சொல்லால் வேதம் வர்ணிக்கிறது.

சம்சாரமாகிய மரம் ஜனன மரணங்களுக்கு ஏதுவானது.

அதை வேரோடு வெட்டி வீழ்த்தி முக்தியைத் தருபவன் ஆதலால் (“பவச்ய ஹேத்யை”) எனப்படுகிறான்.

பக்தனைக் காப்பதற்காக அவன் கூடவே செல்லுபவன் என்று (“தாவதே”) என்ற பதத்திற்கு அர்த்தம் சொல்லுவார்கள் பெரியவர்கள்.

எனவே, பக்தனுக்காகத் தூது செல்லவும் தயங்குவதில்லை பரமன் என்பதைத் திருவாரூரில் சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் தியாகராஜப் பெருமான் தூது சென்றதால் அறியலாம். அது மட்டுமா? இன்னும் உனக்காக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா, அதனையும் செய்கிறேன் என்கிறானாம்.

இதைத்தான் ஸ்ரீ ருத்ரம்,(“தூதாய ச ப்ரஹி தாய ச”) என்று காட்டுகிறது.

தவறு செய்யாதவர்கள் உலகத்தில் யாரும் இல்லை.

அதிலும் தனது பக்தன் செய்யும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு மன்னிக்கிறான் ஈச்வரன்.

இதைத் தான் வேத மாதா நமக்கு, (“ஸஹமானாய”) என்ற பதத்தால் உணர்த்துகிறாள்.

திருக் கருப்பறியலூர் (தலை ஞாயிறு) என்ற ஸ்தலத்தில் ஸ்வாமிக்கு’அபராதக்ஷமாபநேச்வரர்’   (குற்றம் பொறுத்த நாதர்) என்று பெயர்.

(“நமஸ் ஸோமாய ச”) என்று தொடங்கும் எட்டாவது அனுவாகத்தில் ஸ்ரீ பஞ்சாக்ஷரம் வருவதால் பெரியவர்கள் இதை ஜபிப்பதை விசேஷமாகக் கருதுவார்கள்.


இதைத் தான் ஞான சம்பந்தரும், ”வேதம் நான்கினும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே “ என்று பாடினார்.

இவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீ ருத்ர பாராயணத்துடன் சிவ பூஜை செய்பவன் சிவனாகவே ஆகி சிவமே அடைகிறான் என்பதில் ஐயமில்லை..

மரியாதைக்குரிய சிவராம் பந்த் ஜோக்ளேகர் என்ற சிவராம்ஜி


 சிவராம்ஜி என்றால் எனக்கு நல்லோர் வட்டம்நினைவில் வரும்

தமிழ் நாட்டில் ஆர் எஸ் எஸ் தொடங்கியது 1939 ஆம் ஆண்டில்.
1944 முதல் ஸ்ரீ சிவராம் ஜீ தமிழ்நாட்டில் ஆர் எஸ் எஸ் ஸின் பிரசாரகராக இருந்து பணியாற்றியுள்ளார்

29 -06 -1999 அன்று அவர் காலமானது வரை தமிழ்நாட்டுக்காகவே அவர் உழைத்தார். அவரது பிறந்த தேதி 17-05-1917. நட்சத்திரம் ரேவதி. 
பௌதிக சாஸ்திரத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். ஆராய்ச்சி யாளராக வானிலை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றினார்.
எளிமை, லக்ஷியப்பற்று, முன்னுதாரணங்களை உருவாக்கியவர், ரிஷி போன்ற தவ வாழ்க்கை, ஆர் எஸ் எஸ் ஸின் கொள்கையை அச்சு பிசகாமல் கடைபிடித்து நூற்றுக்கணக்கான ஸ்வயம்சேவக் கார்யகர்த்தர்களை உருவாக்கியவர்.
ஒரு ஜீவன் ஒரு லக்ஷிய வாழ்க்கை என கர்மயோகியாக வாழ்ந்தார்.
பரமாச்சாரியார் எப்படியோ அப்படி வாழ்ந்தார் என்று திரு இராமகோபாலன் ஜீ அவர்களால் வர்ணிக்கப்பட்டவர்.
ஆர் எஸ் எஸ் ஸின் பிரசாரகராக தமிழ்நாடு முழுவதும் பணியாற்றியுள்ளார்.தனது 70 வது வயது முதல் சேவைத் திட்டங்களின் பொறுப்பை வகித்தார். நல்லோர் வட்டம் என்ற அமைப்பை நிறுவி சேவைப்பணிகளுக்கு புது வடிவம் தந்தார்.
கிராம முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டார் . மதிப்பிற்குரிய அண்ணா ஹஸாரே அவர்கள் தமிழகம் வந்திருந்து தனது யோசனைகளையும் அனுபவங்களையும் சிவராம் ஜீ யுடன் பகிர்ந்து கொண்டது சிறப்பு.
விஜில் என்னும் அமைப்பை ஏற்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வைக் கொண்டு வர முயன்றார். இதன் மூலம் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களை ஒருங்கிணைத்தார்.
இரத்ததானம் என்பது மிகவும் அறியப்படாத காலகட்டத்திலேயே அதற்கான முயற்சிகளைத்தொடங்கிவிட்டார்.
கண்தானம் என்ற புதிய முயற்சியை சங்கர் நேத்ராலயாவின் துணையுடன் வெற்றிகரமாக்கினார் .
வாழ்வில் நேர்மையைக்கடைபிடிப்பவர்களை தேடிச்சென்று சந்திப்பதென்பதை அவர் தனது தினசரி வேலையாகக் கொண்டிருந்தார்.
இதன்மூலம் சமுதாயத்திற்கு நேர்மையாய் வாழ்வதில் நம்பிக்கையை வளர்த்தார் . 
மருத்துவ மாணவர்களுக்கு தங்களது படிப்புக்கும் பயிற்சிக்கும் இறந்துபோன உடல்கள் தேவை. ஆனால் அவை கிடைப்பதில் பல சிரமங்களிருந்தன. அதைக் கருத்தில் கொண்டு தேக தான இயக்கத்தை தொடங்கினார். தனது மறைவிற்குப் பிறகு தனது உடலை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மனைக்கு ஒப்படைக்க வேண்டி உயில் எழுதி வைத்திருந்தார். அதேபோல் அவரது விருப்பம் நிறைவேற்றப்பட்டது.
ஒருங்கிணைப்பின் மூல சூத்திரத்தை ஒரு வரியில் சொல்லுவார் , "சுத்தணும்- கூடணும்".
ஒவ்வொரு நிமிடமும் ஒருபாடம் நமக்கு சொல்லித்தருவார்.
அவரது நூற்றாண்டில் நினைவு கூறவும் உறுதி ஏற்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.
அவரது ஆசிகளை வேண்டி வணங்கி ஏற்போம்.