Wednesday 30 June 2021

மரியாதைக்குரிய சிவராம் பந்த் ஜோக்ளேகர் என்ற சிவராம்ஜி


 சிவராம்ஜி என்றால் எனக்கு நல்லோர் வட்டம்நினைவில் வரும்

தமிழ் நாட்டில் ஆர் எஸ் எஸ் தொடங்கியது 1939 ஆம் ஆண்டில்.
1944 முதல் ஸ்ரீ சிவராம் ஜீ தமிழ்நாட்டில் ஆர் எஸ் எஸ் ஸின் பிரசாரகராக இருந்து பணியாற்றியுள்ளார்

29 -06 -1999 அன்று அவர் காலமானது வரை தமிழ்நாட்டுக்காகவே அவர் உழைத்தார். அவரது பிறந்த தேதி 17-05-1917. நட்சத்திரம் ரேவதி. 
பௌதிக சாஸ்திரத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். ஆராய்ச்சி யாளராக வானிலை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றினார்.
எளிமை, லக்ஷியப்பற்று, முன்னுதாரணங்களை உருவாக்கியவர், ரிஷி போன்ற தவ வாழ்க்கை, ஆர் எஸ் எஸ் ஸின் கொள்கையை அச்சு பிசகாமல் கடைபிடித்து நூற்றுக்கணக்கான ஸ்வயம்சேவக் கார்யகர்த்தர்களை உருவாக்கியவர்.
ஒரு ஜீவன் ஒரு லக்ஷிய வாழ்க்கை என கர்மயோகியாக வாழ்ந்தார்.
பரமாச்சாரியார் எப்படியோ அப்படி வாழ்ந்தார் என்று திரு இராமகோபாலன் ஜீ அவர்களால் வர்ணிக்கப்பட்டவர்.
ஆர் எஸ் எஸ் ஸின் பிரசாரகராக தமிழ்நாடு முழுவதும் பணியாற்றியுள்ளார்.தனது 70 வது வயது முதல் சேவைத் திட்டங்களின் பொறுப்பை வகித்தார். நல்லோர் வட்டம் என்ற அமைப்பை நிறுவி சேவைப்பணிகளுக்கு புது வடிவம் தந்தார்.
கிராம முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டார் . மதிப்பிற்குரிய அண்ணா ஹஸாரே அவர்கள் தமிழகம் வந்திருந்து தனது யோசனைகளையும் அனுபவங்களையும் சிவராம் ஜீ யுடன் பகிர்ந்து கொண்டது சிறப்பு.
விஜில் என்னும் அமைப்பை ஏற்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வைக் கொண்டு வர முயன்றார். இதன் மூலம் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களை ஒருங்கிணைத்தார்.
இரத்ததானம் என்பது மிகவும் அறியப்படாத காலகட்டத்திலேயே அதற்கான முயற்சிகளைத்தொடங்கிவிட்டார்.
கண்தானம் என்ற புதிய முயற்சியை சங்கர் நேத்ராலயாவின் துணையுடன் வெற்றிகரமாக்கினார் .
வாழ்வில் நேர்மையைக்கடைபிடிப்பவர்களை தேடிச்சென்று சந்திப்பதென்பதை அவர் தனது தினசரி வேலையாகக் கொண்டிருந்தார்.
இதன்மூலம் சமுதாயத்திற்கு நேர்மையாய் வாழ்வதில் நம்பிக்கையை வளர்த்தார் . 
மருத்துவ மாணவர்களுக்கு தங்களது படிப்புக்கும் பயிற்சிக்கும் இறந்துபோன உடல்கள் தேவை. ஆனால் அவை கிடைப்பதில் பல சிரமங்களிருந்தன. அதைக் கருத்தில் கொண்டு தேக தான இயக்கத்தை தொடங்கினார். தனது மறைவிற்குப் பிறகு தனது உடலை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மனைக்கு ஒப்படைக்க வேண்டி உயில் எழுதி வைத்திருந்தார். அதேபோல் அவரது விருப்பம் நிறைவேற்றப்பட்டது.
ஒருங்கிணைப்பின் மூல சூத்திரத்தை ஒரு வரியில் சொல்லுவார் , "சுத்தணும்- கூடணும்".
ஒவ்வொரு நிமிடமும் ஒருபாடம் நமக்கு சொல்லித்தருவார்.
அவரது நூற்றாண்டில் நினைவு கூறவும் உறுதி ஏற்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.
அவரது ஆசிகளை வேண்டி வணங்கி ஏற்போம்.

No comments:

Post a Comment