Monday, 6 December 2021

எருக்கூர் நீலகண்ட பிரம்மாச்சாரியின் 132 வது பிறந்த நாள் (04 டிசம்பர் 2021)




எருக்கூர்  நீலகண்ட பிரம்மாச்சாரியின் 132 வது பிறந்த நாள்  (04 டிசம்பர் 2021)

வாஞ்சிநாதனால் ஆஷ் துரை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் முதல் குற்றவாளியாக கருதப்பட்டு கைதாகி ஏழு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றவர், கைதாகும் போது இவருக்கு வயது 21 தான்.

இந்திய சுதந்திரத்துக்காக புரட்சி இயக்கத்தைத் தோற்றுவித்து அதில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை ஒருங்கிணைத்துப் போராடத் தயாரானவர்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் 'புரட்சி இயக்க' நாயகனாகத் திகழ்ந்த ஒரு தியாக புருஷன்.
பாரதியின் உற்ற நண்பர்,மகாத்மா காந்தி இவரை சந்தித்து பேசுவதற்ககாக மலையடிவாரத்தில் காத்திருந்தார்.அகில இந்திய தலைவர்கள் பலரது அன்பையும் நட்பையும் பெற்றவர் ஆனாலும் யாரிடமும் எதற்கும் போய் நிற்காதவர் உடுத்திய உடையுடன் கையில் பைசா காசு இல்லாமல் கிடைக்கும் உணவை சாப்பிட்டபடி ஒரு தேசாந்திரியாக வாழ்ந்தவர் தனது இளைமைக்காலத்தை நாட்டில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் கழித்தவர் இவர் பத்து நிமிடம் யாரிடம் பேசினாலும் அவர்கள் பிரிட்டிஷாருக்கு எதிரான போராளியாகிவிடுவர் எனப் பயந்த பிரிட்டிஷாரால் பெரும்பாலும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு வாடியவர்.

நாடுதான் பெரிது நான் அல்ல என்று சொல்லி தனக்கான எந்த அடையாளத்தையும் விட்டுச் செல்லாதவர் அவரைப் போன்றவர்களின் வரலாறு இன்றைய இளைய தலைமுறையிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.

1889ம் வருஷம் டிசம்பர் மாதம் 4ம் தேதி சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி எனும் கிராமத்தில் சிவராமகிருஷ்ணன் சுப்புத்தாயி தம்பதியினரின் மூத்த மகனாகப் பிறந்தார். 2 தம்பிகள் 5 தங்கைகள் என்று பெரிய குடும்பத்தில் பிறந்தவர் இவரது குடும்ப சொத்து என்பது வறுமைதான்.
உள்ளூர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர் ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் ஊர் ஊராகச் சென்றார் சென்னையில் விபின் சந்திர பால் எனும் புரட்சிகர தேசபக்தர் பேச்சைக் கேட்டபிறகு புரட்சிகர இளைஞர்களாக மாறியவர்களில் இவரும் ஒருவர்.

1907ல் இவருக்கு மகாகவி பாரதியாரின் தொடர்பு அவர் மூலமாக வ.உ.சியின் அறிமுகம், வங்காளத்து புரட்சி வீரரான சந்திரகாந்த் சக்ரபர்த்தியுடனான நட்பு என்று எல்லாம் சேர்ந்து அவரை கனன்று எரியும் புரட்சியாளராக மாற்றியது.
குடுமியை நீக்கி கிராப் வைத்துக் கொண்டார்.1908ல் இவர் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்குச் சென்று 'அபினவ பாரத இயக்கத்தைத்' தொடங்கி வைத்தார். அதற்காக இவர் திருநெல்வேலியைச் சுற்றி பல ஊர்களுக்கும் சென்று ரகசியக் கூட்டங்களை நடத்தினார். இதில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்தனர்.அந்த இளைஞர்களில் வாஞ்சிநாதனும் ஒருவர்.ஆனால் நீலகண்டனுக்கு தனிநபரை கொல்வதில் எப்போதும் உடன்பாடு இருந்தது இல்லை ஒரு இயக்கமாக இயங்கி வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்.
இருந்தும் வாஞ்சிநாதன் சம்பவத்தில் முதல் குற்றவாளியகாக நீலகண்டன் கைது செய்யப்பட்டார்.சிறையில் பல வகையில் கொடுமைப்படுத்தப்பட்டார் அவர் தற்கொலைக்கு முயலும் அளவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தினர் சிறையில் அவர் நேர்மையாக இருந்த காரணத்தால் நாலண்டு காலத்தில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் விடுதலை செய்திருக்கப்பட வேண்டும் அனால் விடுதலை செய்யும் நேரதில் சிறையில் இருந்து தப்பமுயன்றார் என்று குற்றம் சுமத்தி மேலும் மூன்றரை ஆண்டுகாலம் சிறையில் பூட்டி அவரை பிரிட்டிஷ் அரசு வாட்டியது.
தண்டனை முடிந்து 1919 ஆகஸ்ட் 14ம் தேதி இவர் விசாகப்பட்டினம் சிறையிலிருந்து விடுதலையானார். அங்கிருந்து இவர் சென்னை திரும்பி பாரதியாருடனும் வறுமையுடனும் தொடர்பில் இருந்தார் பல நாள் பச்சைத்தண்ணீர்தான் உணவு.ஆனாலும் விடுதலை உணர்வு மட்டும் மங்கிவிடவில்லை.
தேசபக்தர் சிங்காரவேலரின் புரட்சிப் பிரசுரங்களை வெளியிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மீண்டும் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.அவர் எங்கு இருக்கிறார் என்பதையே தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக ரங்கூன் முதல் பர்மா வரை பல சிறைகளில் அவர் அடைக்கப்பட்டு வதைக்கப்பட்டார்.
சிறை அவரது உடலையும் உள்ளத்தையும் உருக்கிவிட்டதால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு 1931ல் தேசாந்தரம் செய்யப் புறப்பட்டுவிட்டார். தனக்கென்று ஒரு அடையாளம், பெயர் எதுவுமின்றி ஊர் ஊராகப் பயணித்துக் கிடைத்ததை உண்டு வாழ்ந்து வந்தார்.புகழ்,பெருமை,கீரிடம்,குடும்பம் என்று எதுவுமற்ற இந்த துறவு வாழ்க்கை அவருக்கு பிடித்துப் போனது ஒரு கட்டத்தில் ஊர் சுற்றியது போதும் என முடிவு செய்து மைசூரு நந்தி மலையடிவாரத்தில் வாழ்ந்து வந்தார்.
அவரது தேஜஸான முகத்தை பார்த்து அவரைப் பார்க்க மக்கள் கூடினர் உங்களுக்கு கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை தண்ணீர்தான் இருக்கிறது என்று குகையருகே ஓடிய சுனை நீரைக் கொடுத்தார் அவர் தந்த அந்த சுனை நீரால் தங்கள் வியாதிகள் குணமானதாக மக்கள் செய்தி பரப்ப கூட்டம் திரண்டது கூடிய மக்கள் அவரது பக்தர்களாயினர் அவர் எப்போதும் ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்ததினால் சுவாமி ஒம்காராணந்தா என்று அழைக்கப்பட்டார்.
இது அவருக்கு பிடிக்கவில்லை எதுவுமே வேண்டாம் என்றுதானே இந்த மலையடிவாரத்திற்கு வந்தோம் இங்கே இது என்ன புது பதவி புகழ் என்று வெறுத்தவர் மக்கள் எளிதில் வரஇயலாதபடி அந்த மலையின் உச்சிக்கு சென்றுவிட்டார் அந்தப் பகுதியில் கிடைத்த பழங்களை மட்டுமே உண்டு யாருடைய தொடர்பும் இன்றி தியான வாழ்வை மேற்கொண்டார்.சதா காலமும் ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்தபடி இருந்ததினால் இவர் ஒம்காரனாந்தா என்று அழைக்கப்பட்டார்.
இவரது மன உறுதி, தவத் தோற்றம் இவற்றால் கவரப்பட்ட விஜயநகர ராஜகுடும்பத்து ராணி குப்பம்மாள் என்பவர் இவரை மரியாதையுடன் வரவேற்று உபசரித்து அரண்மனையில் இருக்க கேட்டுக் கொண்டார் இந்தப் பரதேசிக்கு இதெல்லாம் ஒத்துவராது என்று சொல்லிவிட்டு திரும்ப மலை மீது ஏறிக்கொண்டார்.
இப்படி நாற்பத்தி நான்கு ஆண்டுகள் புரட்சி வாழ்க்கையையும் ,நாற்பத்தி நான்கு ஆண்டுகள் தவ வாழ்க்கையும் வாழ்ந்த வாழ்ந்த நீலகண்ட பிரம்மச்சாரி அரசியல்,பொதுவாழ்வு ஆன்மீகம் பற்றி மூன்று நுால்களை எழுதியுள்ளார்.அவரைப் பற்றிய புத்தகங்களும் குறிப்புகளுமே சொற்பமாக இருக்கும் இந்நாளில் அவர் எழுதிய புத்தகங்களை தேடிப்பிடிப்பது சிரமமே.
துள்ளித்திரியும் இளம் வயதில் புரட்சிக்காரனாக மலர்ந்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய நீலகண்ட பிரம்மச்சாரி பின்னர் ஆன்ம விசாரணையில் ஈடுபட்டு சுவாமி ஓம்காரானந்தாவாக மிளிர்ந்து ஞான ஒளி பரப்பிய அந்த மகான், 1978 மார்ச் மாதம் 4ம் தேதி இறந்தார்.மறுநாள் ஆயிரக்கணக்கானவர்கள் அழுதபடி கூடியிருக்க அவரது பூதவுடல் அக்னிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கெதிரான சுதந்திர வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இந்த மாபெரும் புரட்சிக்காரர் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் விதைத்த விதையும் சுதந்திரம் பெற ஒரு காரணம் என்று தலைவர்கள் புகழாரம் சூட்டினர்

நன்றி திரு எல்.முருகராஜ், தினமலர் - 04 டிசம்பர் 2021



 

Wednesday, 17 November 2021

Monday, 15 November 2021

FAITH - Greatness of Sri Rudram

 FAITH - Greatness of Sri Rudram

Most of us are devoted to God and engage in worship, prayer, dhyana, etc, as part of propitiating Him. But when each one asks himself the true purpose for propitiating God, the answer is best known to him and to God, of course. Generally people being bound to this world, often tend to seek worldly goals from the Lord. These are, of course, necessary to cross this world of samsara. But the Lord is so compassionate towards the ignorant devotee who is sadly missing out on the chance of seeking salvation from Him, pointed out Sri. B. Sundarkumar in a discourse. It is by His grace that the desire for salvation can take root in the devotee.

There is a very astonishing section of the Vedas, Sri Rudram, that teaches man what to seek from God and also ask for forgiveness of sins. It is a powerful mantra in the Taittiriya Samhita that is in the Krishna Yajur Veda. Sri Rudram is the fifth Prasna placed carefully in the central and fourth kanda. Namakam and Chamakam are the fifth and seventh chapters in this section and herein the Vedas pay homage to Siva, the supreme deity in Saivism and extol His omnipresence, omnipotence and omniscience. The Namakam enumerates the various epithets and names of Rudra. The Chamakam asks for fulfilment of wishes that encompass all the requirements of all beings in all walks of life. In this list is also included Moksha or salvation which is subtly shown to be the ultimate requirement over all else which are ephemeral.

Appayya Dikshitar in his Siva Ashtottara praises the Lord as “Apavarga Pradayakaya Namaha.” This means one who is capable of granting the highest Purushartha Moksha. The Lord is so magnanimous that He is satisfied with even the offer of the simple Tumbha flower and in return grants moksha to one who sincerely wishes it.

Courtesy: The Hindu, dated 17th October 2021


Friday, 23 July 2021

23-07-2021 Guru Poornima Guru Purnima is also the day that marks the birth anniversary of Maharishi Ved Vyasa, the author of the great Indian epic, Mahabharata.


 23-07-2021 Guru Poornima


Guru Purnima is also the day that marks the birth anniversary of Maharishi Ved Vyasa, the author of the great Indian epic, Mahabharata. This day is also known as Vyasa Purnima. The term 'Gu' in Guru stands for darkness, and 'Ru' means removal of darkness. Thus, a guru is someone who removes all darkness from our lives



இன்று 23-07-2021 குரு பூர்ணிமா


குரு பூர்ணிமா என்பது முனிவர் வேத வியாசருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாகும். இந்த நன்னாளில் தான் வேத வியாசர் பிறந்ததாக நம்பப்படுகிறது,


வேத வியாசர் மிகச்சிறந்த குருவாக போற்றப்படுபவர். வேதங்களை, ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தியவர். உலகின் மிக நீளமான பிரம்மாண்ட காவியமான மகாபாரதத்தை எழுதியவரும் இவரே. வியாச மஹரிஷி, பராசர முனிவரின் புதல்வர். இவரது இயற்பெயர், கிருஷ்ணதுவைபாயனர். வேதத்தின் சாரமாக, 18 புராணங்களை இயற்றித் தந்தவரும் இவர்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, பிரம்மசூத்திரத்தை நமக்களித்தவரும் இவரே. மஹாபாரதத்தை, வியாசமஹரிஷி கூற அதனை விநாயகப் பெருமான் எழுதினார் என்கிறது புராணம்.


'குரு' இரண்டு வேர்களைக் கொண்டுள்ளது. அதாவது 'கு'என்பது 'இருள்'என்று பொருள் மற்றும் 'ரு' என்பதன் அர்த்தம் 'இருளை அல்லது அறியாமையை நீக்குதல் என்று பொருள். குருவானவர் நம்மை அறியாமையிலிருந்து விடுபட்டு நல்வழியை நமக்குக் காட்டுகிறார். நமக்கு நல்வழி காட்டிய குருவையும், ஆசிரியர்களையும், ஆன்மீகத் தலைவர்களையும் கௌரவிக்கும் நாளாக குரு பூர்ணிமா நாள் கொண்டாடப்படுகிறது.


23-07-2021 - திரு. சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவு தினம்

23-07-2021 - திரு. சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவு தினம் 

சுப்பிரமணிய சிவா (4 அக்டோபர் 1884 - 23 சூலை 1925) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார்.



 

சந்திரசேகர் ஆசாத் - மா வீரர் பிறந்த தினம் ஜூலை 23





அந்த நீதி மன்றத்தில் மயான அமைதி, பெருங் கூட்டமாக பார்வையாளர்கள் காரணம்.??... குற்றவாளி.. 15 தே..வயதான  கட்டு மஸ்தான இளைஞர்?? .  ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டதனால்  கைதானவர்.. 
நீதிபதியின் , உன் பெயர், உன் தந்தை பெயர், வாழும் இடம்  என்ன, ஏது என்ற  திரும்ப, திரும்ப கேட்க்கும்  கேழ்வி களுக்கு எல்லாம்   இளைஞர்..... ஆசாத்  (விடுதலை) , சுதந்திரம், சிறைச்சாலை  என்ற பதில்களையே முறையே சலிக்காமல்  அளித்து வந்தார்.  
ஆத்திரம் அடைந்த நீதிபதி  அவருக்கு கடும் காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூற... பார்வையாளர்  கூட்டம்  ஹா, ஹா  என்று  இரங்கியது... . 
இளைஞரோ புன் சிரிப்புடன் 
 "அப்படி பதில் சொன்னால் தான் என்னை சிறைக்கு அனுப்புவீர்கள்  என்பதினால் தான் அப்படி பதில் அளித்தேன் என்று  சொல்ல" .........
சட் என இறுக்கம் தளர்ந்து  கோர்ட்டே நீதிபதியைப்   பார்த்து  கொல் எனச் சிரித்தது. 
 கோபம் தலைக்கேறிய  நீதிபதி  அவருக்கு கூடவே 15    பிரம்படி  தண்டனையும்  வழங்கினார்... 
இளைஞர் அசர வில்லை... 
பிரம்படி கள் கொடுக்கப்பட்ட   போது . ஒவ்வொரு அடி விழும் போதும் அவர் வாய்..... " பாரத் மாதீ கீ ஜெய்"...... "வந்தே மாதரம்" ..... என முழங்கியது. 
அந்த இளைஞர் தான் சந்திரசேகர் திவாரி....  இப்போது அவர்  பெயருடன் ஆசாத்தும்  சேர்ந்து கொண்டது. 
 மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாபாரா கிராமத்தில்  பிராமண குடும்பத்தில். சீதாராம் திவாரி    & ஜக்ரானி தேவி  தம்பதியருக்கு பிறந்தார்.. 
 காசியில் தன் தாயின் விருப்பப்படி சம்ஸ்கிருத பண்டிதராக. வேண்டும்  என்று படித்துக்கொண்டு இருக்கும் போது தான்.. ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு கைதானார்..... 
காந்தியார்... கொள்கைகளில் நம்பிக்கை இழந்த ஆசாத்.
 தீவிரவாத இயக்கமான HSRA  (ஹிந்துஸ்தான் சோஷியலிஸ்ட்  ரிப்பப்ளிக் அஸோசியேஷன்) இல்  தன்னை ஈடு படுத்திக் கொண்டு.....
 ஆங்லேயர்களை துரத்தி அடிக்க ரகசியக் கூட்டங்களில் அபாரமான யோசனைகள் கூறுவார்... அதனாலேயே இவரை பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் போன்ற எல்லா  புரச்சியாளர்களும் பண்டிட் ஜீ என்றே அழைப்பர்.. 
குறி தவறாமல் துப்பாக்கிச் சுடுவதில் புலி. 
1925ஆம் ஆண்டு நடந்த ககோரி ரயில் கொள்ளை, 
1926ஆம் ஆண்டு வைஸ்ராய் பயணம் செய்த ரயில்பெட்டியின் அடியில் குண்டு வைத்தல்..
நாடாளுமன்றத்தில் குண்டு வீச்சு 
 பஞ்சாப் சிங்கம் , லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு காரணமான   போலீஸ் சூப்பிரண்டெண்டண்ட்  ஸ்காட் டை  பழிவாங்க   பகத்சிங், சுகதேவ்,ராஜகுரு   முதலானவர்களுன் சேர்ந்து அவரை சுட்டுக் கொல்ல முயன்ற போது அது  MISTAKEN IDENTIFY காரணமாக மற்றொரு காவல் அதிகாரி யான  சாண்டர்ஸ் கொலையில் 
என எல்லா  புரடச்சி போராட்டத்திலும் பண்டித்ஜீ . யின் ... திட்டம்... கை வாடா உண்டு.  
இலச்சியத்திற்க்கு திருமணம் தடை என்று   பிரம்மச்சாரி 
போலீஸ் இவரை கைது செய்ய   வலை வீசி தேடிக் கொண்டு இருந்தது. இவரும் விடாமல் அவர்கள் கண்ணில்  மண்தூவி வந்தார்.. மாறு வேட ஸ்பெஷல்ஸிஸ்ட். 
ஜான்சி நகரின் அருகில்  உள்ள ஒரு ஆஞ்சனேயர் கோவில் பக்கம்    குடிசை போட்டுக் கொண்டு  சிறு வர்களுக்கு  சமஸ்கிருதம்  கற்றுக் கொடுக்கும்  பரம பூஜ்ய.. சாது...   மாறு வேஷ      பண்டிட் ஹரிசங்கர் பிரம்மச்சாரி ... தான்  தாங்கள் வலை வீசி தேடிவரும் ஆசாத்  மற்றும்     HSRA போர் பிரகடனங்களை வெளியிடும்... HSRA யின்   தளபதி பல்ராஜ்   என்பது பொலீசுக்கு கடைசி வரை  தெரியவே இல்லை......
  சந்திர சேகர் திவாரி, ஆசாத், பால்ராஜ், பண்டிட் ஜீ எல்லாம் இவரே. 
 இந்த ஆடு புலி ஆட்டத்திற்க்கும் ஒரு முடிவு வந்தது. 
1931ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் நாள் ப்ரயாக்ராஜ் நகரில் உள்ள ஆல்பிரெட் பூங்காவில்  ஆசாத் தன்  புரட்சிப்படை நண்பரான சுகதேவ் ராஜ் உடன்  இருக்கிறார் என்ற  தகவல் துரோகிகளிடம்  இருந்து அரசுக்கு  கிடைக்க.
 ஆங்கிலப்படை பார்க்கை சுற்றி வளைக்கிறது , தன் நண்பர் சுகதேவ் ராஜ் ஜை தப்புவுக்க  ஆசாத் ஆங்கிலேயருடன் ஒரு மரத்தின் மறைவில் இருந்து  துப்பாக்கி சண்டையில் ஈடுபட... , அதில் இரண்டு ஆங்கில  அதிகாரிகள் படு காயம்.....( சுக் தேவ் தப்பி விடுகிறார்) அயலாரிடம் உயிருடன் சிக்கக்கூடாது  என்ற தன் கொள்கைப் படி போராடிய படியே... தன் துப்பாக்கியில் கடைசி குண்டு இருக்கும் போது,  தன்னையே சுட்டுக் கொண்டு வீர மரணம் அடைகிறார்  சந்திரசேகர திவாரி ஆசாத். அப்போது அவர் வயது 24 மட்டுமே. 
அந்தப் பார்க்கின் இன்றைய பெயர் சந்திரசேகர் ஆசாத் பார்க். 
அந்த மா வீரர் பிறந்த தினம் ஜூலை 23 1906.
 வாழ்க அவர் புகழ், வந்தே மாதரம், பாரத் மாதாகீ ஜெய்...