அந்த நீதி மன்றத்தில் மயான அமைதி, பெருங் கூட்டமாக பார்வையாளர்கள் காரணம்.??... குற்றவாளி.. 15 தே..வயதான கட்டு மஸ்தான இளைஞர்?? . ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டதனால் கைதானவர்..
நீதிபதியின் , உன் பெயர், உன் தந்தை பெயர், வாழும் இடம் என்ன, ஏது என்ற திரும்ப, திரும்ப கேட்க்கும் கேழ்வி களுக்கு எல்லாம் இளைஞர்..... ஆசாத் (விடுதலை) , சுதந்திரம், சிறைச்சாலை என்ற பதில்களையே முறையே சலிக்காமல் அளித்து வந்தார்.
ஆத்திரம் அடைந்த நீதிபதி அவருக்கு கடும் காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூற... பார்வையாளர் கூட்டம் ஹா, ஹா என்று இரங்கியது... .
இளைஞரோ புன் சிரிப்புடன்
"அப்படி பதில் சொன்னால் தான் என்னை சிறைக்கு அனுப்புவீர்கள் என்பதினால் தான் அப்படி பதில் அளித்தேன் என்று சொல்ல" .........
சட் என இறுக்கம் தளர்ந்து கோர்ட்டே நீதிபதியைப் பார்த்து கொல் எனச் சிரித்தது.
கோபம் தலைக்கேறிய நீதிபதி அவருக்கு கூடவே 15 பிரம்படி தண்டனையும் வழங்கினார்...
இளைஞர் அசர வில்லை...
பிரம்படி கள் கொடுக்கப்பட்ட போது . ஒவ்வொரு அடி விழும் போதும் அவர் வாய்..... " பாரத் மாதீ கீ ஜெய்"...... "வந்தே மாதரம்" ..... என முழங்கியது.
அந்த இளைஞர் தான் சந்திரசேகர் திவாரி.... இப்போது அவர் பெயருடன் ஆசாத்தும் சேர்ந்து கொண்டது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாபாரா கிராமத்தில் பிராமண குடும்பத்தில். சீதாராம் திவாரி & ஜக்ரானி தேவி தம்பதியருக்கு பிறந்தார்..
காசியில் தன் தாயின் விருப்பப்படி சம்ஸ்கிருத பண்டிதராக. வேண்டும் என்று படித்துக்கொண்டு இருக்கும் போது தான்.. ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு கைதானார்.....
காந்தியார்... கொள்கைகளில் நம்பிக்கை இழந்த ஆசாத்.
தீவிரவாத இயக்கமான HSRA (ஹிந்துஸ்தான் சோஷியலிஸ்ட் ரிப்பப்ளிக் அஸோசியேஷன்) இல் தன்னை ஈடு படுத்திக் கொண்டு.....
ஆங்லேயர்களை துரத்தி அடிக்க ரகசியக் கூட்டங்களில் அபாரமான யோசனைகள் கூறுவார்... அதனாலேயே இவரை பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் போன்ற எல்லா புரச்சியாளர்களும் பண்டிட் ஜீ என்றே அழைப்பர்..
குறி தவறாமல் துப்பாக்கிச் சுடுவதில் புலி.
1925ஆம் ஆண்டு நடந்த ககோரி ரயில் கொள்ளை,
1926ஆம் ஆண்டு வைஸ்ராய் பயணம் செய்த ரயில்பெட்டியின் அடியில் குண்டு வைத்தல்..
நாடாளுமன்றத்தில் குண்டு வீச்சு
பஞ்சாப் சிங்கம் , லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு காரணமான போலீஸ் சூப்பிரண்டெண்டண்ட் ஸ்காட் டை பழிவாங்க பகத்சிங், சுகதேவ்,ராஜகுரு முதலானவர்களுன் சேர்ந்து அவரை சுட்டுக் கொல்ல முயன்ற போது அது MISTAKEN IDENTIFY காரணமாக மற்றொரு காவல் அதிகாரி யான சாண்டர்ஸ் கொலையில்
என எல்லா புரடச்சி போராட்டத்திலும் பண்டித்ஜீ . யின் ... திட்டம்... கை வாடா உண்டு.
இலச்சியத்திற்க்கு திருமணம் தடை என்று பிரம்மச்சாரி
போலீஸ் இவரை கைது செய்ய வலை வீசி தேடிக் கொண்டு இருந்தது. இவரும் விடாமல் அவர்கள் கண்ணில் மண்தூவி வந்தார்.. மாறு வேட ஸ்பெஷல்ஸிஸ்ட்.
ஜான்சி நகரின் அருகில் உள்ள ஒரு ஆஞ்சனேயர் கோவில் பக்கம் குடிசை போட்டுக் கொண்டு சிறு வர்களுக்கு சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்கும் பரம பூஜ்ய.. சாது... மாறு வேஷ பண்டிட் ஹரிசங்கர் பிரம்மச்சாரி ... தான் தாங்கள் வலை வீசி தேடிவரும் ஆசாத் மற்றும் HSRA போர் பிரகடனங்களை வெளியிடும்... HSRA யின் தளபதி பல்ராஜ் என்பது பொலீசுக்கு கடைசி வரை தெரியவே இல்லை......
சந்திர சேகர் திவாரி, ஆசாத், பால்ராஜ், பண்டிட் ஜீ எல்லாம் இவரே.
இந்த ஆடு புலி ஆட்டத்திற்க்கும் ஒரு முடிவு வந்தது.
.
1931ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் நாள் ப்ரயாக்ராஜ் நகரில் உள்ள ஆல்பிரெட் பூங்காவில் ஆசாத் தன் புரட்சிப்படை நண்பரான சுகதேவ் ராஜ் உடன் இருக்கிறார் என்ற தகவல் துரோகிகளிடம் இருந்து அரசுக்கு கிடைக்க.
ஆங்கிலப்படை பார்க்கை சுற்றி வளைக்கிறது , தன் நண்பர் சுகதேவ் ராஜ் ஜை தப்புவுக்க ஆசாத் ஆங்கிலேயருடன் ஒரு மரத்தின் மறைவில் இருந்து துப்பாக்கி சண்டையில் ஈடுபட... , அதில் இரண்டு ஆங்கில அதிகாரிகள் படு காயம்.....( சுக் தேவ் தப்பி விடுகிறார்) அயலாரிடம் உயிருடன் சிக்கக்கூடாது என்ற தன் கொள்கைப் படி போராடிய படியே... தன் துப்பாக்கியில் கடைசி குண்டு இருக்கும் போது, தன்னையே சுட்டுக் கொண்டு வீர மரணம் அடைகிறார் சந்திரசேகர திவாரி ஆசாத். அப்போது அவர் வயது 24 மட்டுமே.
அந்தப் பார்க்கின் இன்றைய பெயர் சந்திரசேகர் ஆசாத் பார்க்.
அந்த மா வீரர் பிறந்த தினம் ஜூலை 23 1906.
வாழ்க அவர் புகழ், வந்தே மாதரம், பாரத் மாதாகீ ஜெய்...
No comments:
Post a Comment