Thursday 28 May 2020

வாரணாசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது


*வாரணாசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது?*

*இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்: காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்!*

*அதன் முகவரி மற்றும் தொலை பேசி எண் என்ன?*

*கீழே கொடுத்துள்ளேன்.*

*அனைவரும் தங்கலாமா?*

இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம்.

சிபாரிசுக் கடிதம் வேண்டுமா?

அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும். அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது

முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:

Sri Kasi Nattukkottai Nagara Satram
Godowlia,
Varanasi - 221 001 (U.P)
Telephone Nos: 0542 - 2451804,
Fax No: 0542 - 2452404

(ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்)

Naat Koat Satram
Location Godowlia, Tanga Stanad
Behind Sushil Cinema
Varanasi

கட்டணம் உண்டா?

உண்டு! தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர். உள்ளே உள்ள அரங்கங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கினால், அதற்கு வாடகை கிடையாது.

உங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர்களைத் தருவார்கள். ஒரு லாக்கருக்கு ஒரு நாள் வாடகை பத்து ரூபாய் மட்டுமே! குழுவாகச் சென்றால், மண்டபங்கள் அரங்குகள் உள்ளன. அதுதான் வசதி. 20 பேர்கள், 30 பேர்கள், 50 பேர்கள் என்று வருபவர்களுக்கு, அவர்களின் அளவிற்கு ஏற்றபடி தங்கும் அரங்குகள், மண்டபங்கள் உள்ளன. பாய்கள், ஜமுக்காளங்கள், தலையணைகள் எல்லாம் அங்கேயே கிடைக்கும். அதற்குச் செலவில்லை.

ப்ரைவேசி வேண்டும் என்றால் தனி அறைகள் நிறைய உள்ளன. மூன்று விதமான அறைகள் உள்ளன. முன் காலத்தில் கட்டப்பெற்ற அறைகள்
அடுத்த காலகட்டத்தில் கட்டப்பெற்ற Attached Bath Room and Flush Outஉடன் கூடிய அறைகள். மற்றும் டீலக்ஸ் அறைகள். சுமார் 60 அறைகள் உள்ளன. சுமார் 500 பேர்கள் வரை தங்கும் வசதி உள்ளது.

மகா சிவராத்திரி, தீபாவளி, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற சமயங்களில் இருக்காது. தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 150 பேர்கள்வரை வந்து செல்கிறார்கள். அவர்களில் நகரத்தார்களின் பங்களிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவானதே. விழாக்காலங்களில் நகரத்தார்கள் 200 பேர்களுக்கு மேல் வந்து செல்வார்கள்.

எத்தனை பேர்கள் வந்தாலும் தாங்கும். உள்ளே குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள் தங்கும் அனைவருக்கும் சிறப்பாக உண்டு. அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தனியாகப் பணியாளர்கள் உள்ளார்கள். விடுதிக்கு 4 காவற்காரர்கள் உள்ளார்கள்.

இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம் கழிப்பறை குளியலறை இணைப்புடன் கூடிய அறைகளுக்கு (2/3 பேர்கள் தங்கலாம்) நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் கட்டணம்
டீலக்ஸ் அறைகளில் 4 பேர்கள் தங்கலாம். அதற்கு நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம்

குளியல் அறைகளில் Water Heater உண்டு
குடிப்பதற்கு Purified Water உண்டு
மின்தடை இருக்காது Full Gen Set வசதி உண்டு

சரி உணவு?

விடுதியில் மிகப் பெரிய சமையல் அறையும், பரிமாறும் கூடங்களும் உள்ளன. இரண்டு செட்டி நாட்டு சமையல்காரர்களும், ஆறு பணியாளர்களும் உள்ளனர். சைவ உணவுகள் மட்டுமே. நம்பிச் சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.

1
காலைச் சிற்றுண்டி: நேரம் 8 மணி முதல் 10 மணி வரை.
இட்லி, பொங்கல் சாம்பார், சட்னி - அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். டீ உண்டு
கட்டணம் ரூ.35:00 மட்டுமே

2.
மதிய உணவு: நேரம் 12:30 மணி 2:30 மணி வரை
சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர். அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். 90% கட்டணம் இருக்காது. அன்னதானக் கணக்கில் சாப்பாடு இலவசம். சில நாட்களில் கட்டளைதாரர்கள் இல்லை என்றால் அப்போது மட்டும் தலைக்கு ரூ.40:00 கட்டணம்

ரூ.4,000:00 அன்னதானக் கணக்கில் செலுத்திய கட்டளைதாரர்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் விரும்பிய தினத்தில் அவர்கள் பெயரில் அன்னதானம் நடைபெறும்.

3. மாலை 4 மணி டீ உண்டு

4. இரவு 7:30 முதல் 9 மணிவரை
இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, சாம்பார், சட்னி, குருமா என்று உள்ளன. அவற்றில் ஏதாவது இரண்டைச் செய்து பரிமாறுவார்கள்
கட்டணம் ரூ.35:00 மட்டுமே

உணவிற்குக் காலை 8 மணிக்கும் கூப்பன்களை வாங்கிவிட வேண்டும். அவர்கள் ஆட்களை எண்ணி அதற்குத் தகுந்தாற்போல சமைப்பதற்காக அந்த ஏற்பாடு

Wednesday 20 May 2020

சுண்ணாம்பு .. The White Lime....

*சுண்ணாம்பு ..*

 எல்லா வீடுகளிலும் சுண்ணாம்பு இருக்கும். அதை மருந்துபோல் பயன்படுத்தி வந்தார்கள். நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் வேறு ஏதாவதொரு பொருளோடு சேர்த்து சாப்பிட்டார்கள். குறிப்பாக வெற்றிலை பாக்கோடு சேர்த்து பயன் படுத்தினார்கள். இப்போது வெற்றிலை சாப்பிடும் வழக்கமே இல்லை. வீடுகளில் சுண்ணாம்பும் இருப்பதில்லை. கடைகளில்கூட அரிதாகத்தான் கிடைக்கிறது.

சாப்பிட்டவுடன் வெற்றிலை சாப்பிடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கும். சுண்ணாம்பு எலும்புகளுக்கு நல்லது. கால்சியம் சத்தை தரக்கூடியது. தொண்டைக்கும் நல்லது. அது குழந்தை களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய இயற்கைப் பொருள்.

ஒரு தேக்கரண்டி தேனில் ஊசி முனையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் அதைவிட பெரிய மருந்தே கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். அடிக்கடி ஏதாவதொரு உடல்நல குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் இதை சாப்பிட்ட பின்பு சுறு சுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். எலும்புகளும் உறுதியாகும்.

இது ஆண்மை விருத்திக்கு நல்லது என்று கூறப்படுகிறது. விந்தணுக்கள் குறைவாக உள்ளவர்கள் கரும்பின் சாற்றில் சிறிது சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பெண்களுக்கு ஆரோக்கியமான கருமுட்டை உருவாக சுண்ணாம்பு காரணமாக உள்ளது. பெண்கள் சுண்ணாம்பை ஏதேனும் ஒரு உணவுப் பொருளுடன் கலந்து சாப்பிடலாம்.

மாணவர்களுக்கு சுண்ணாம்பால் நினைவாற்றல் பெருகும். படிக்கும் மாணவர்களுக்கு கெட்டித் தயிரில் ஒரு கோதுமையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் நினைவாற்றல் பெருகும். மூளையின் சக்தி அதிகரிக்கும்.. நீர் மோர், ஜூஸ், தண்ணீரிலும் கலந்து கொடுக்கலாம். நல்ல மாற்றம் தெரியும்.

 கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக கால்சியம் தேவை. அந்த தேவையை சுண்ணாம்பு பூர்த்தி செய்யும். மாதுளம் பழம் சாற்றில், ஒரு கோதுமையளவு சுண்ணாம்பு கலந்து தினமும் குடிக்க லாம். அதன் மூலம் உடலுக்கு தேவையான சுண்ணாம்பு அதாவது கால்சியம் கிடைப்பதுடன், பிரசவமும் எளிமையாகலாம். அதுமட்டுமல்ல அந்த கால்சியம் குழந்தைக்கும் போய் சேர்ந்து மூளை வலுப்பெற்ற நிலையில் குழந்தை பிறக்கும்.

 இப்பொழுதெல்லாம் சுண்ணாம்புக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் கடையில் கால்சியம் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். எந்த மாத்திரையானாலும் அது பக்கவிளைவுகளை தரக்கூடியதுதான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இயற்கை முறையில் நாம் சாப்பிடும் கால்சியம் நம் உடலுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு அதிகப்படியாக உள்ளதை வெளியேற்றிவிடும். ஆனால் மாத்திரைகள் அப்படியில்லை. தேவையில்லாத தொந்தரவுகளை உருவாக்கிவிடும்.

பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுண்ணாம்பு நல்ல தீர்வு தரும். ரத்தக் குறைபாடு, அதிக ரத்தப் போக்கு, உடல்வலி, வயிற்று வலி, குறைந்த ரத்தப் போக்கு, உடல் உஷ்ணம், சோர்வு இவையனைத்திற்கும் சுண்ணாம்பு நல்ல தீர்வாக இருக்கும்.

கரும்பு ஜூஸ், ஆரஞ்சு பழரசம், மாதுளம் பழச்சாறு இவற்றுடன் ஒரு கோதுமையளவு சுண்ணாம்பை கலந்து குடித்து வந்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும். அது போன்று கீழாநெல்லிக்கீரை, வெள்ளை கீரை, கறிவேப்பிலை ரசம் ஆகியவற்றுடன் ஒரு துளி சுண்ணாம்பு கலந்து சாப்பிடவேண்டும். பற்கள், ஈறுகளில் பிரச்சினை இருந்தால் வெற்றிலை, துளசியுடன் ஒரு துளி சுண்ணாம்பு கலந்து சாப்பிடலாம்.

மிக குறைந்த அளவில் சுண்ணாம்பு கலந்த நீரில் தினமும் வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகள், பற்கள் பலம்பெறும். தோள்பட்டை வலி, மூட்டு வலி இவற்றிற்கு சிறிது சுண்ணாம்பை துளசி சாற்றில் கலந்து தேய்த்துவிட்டால் வலி மறையும். விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் சிறிது சுண்ணாம்பு வைத்தால் விஷம் நீங்கும்.

நல்லெண்ணெய்யில் சிறிது சுண்ணாம்பு கலந்து உடலில் பூசிவிட்டால் கொசுக்கடி, வேர்குரு தழும்புகளிலிருந்து விடுபடலாம். பல்லில் கூச்சம் உள்ளவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது உப்பு, சுண்ணாம்பு கலந்து கொப்பளித்து வந்தால் பல் கூச்சம் மறையும். பல்லில் ரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் போன்றவைகளுக்கும் இது நல்ல மருந்து.

தொண்டை இனிமையாக இருக்க சுண்ணாம்பு துணைபுரிகிறது. அந்த காலத்தில் பாட்டுப்பாடும் பாகவதர்கள் வெற்றிலைப் பெட்டியை கையோடு வைத் திருப்பதற்கு இதுதான் காரணம்.

பச்சரிசி, மிளகு இவற்றோடு சிறிது சுண்ணாம்பை கலந்து நன்றாகமென்று சாற்றை தொண்டை முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும். அபார குரல்வளம் கிடைக்கும். அந்தக்கால மேடைநாடக நடிகர்கள் கைவசம் வைத்திருக்கும் மருந்து இது. வெற்றிலையில், தேன் தடவி, கிராம்புடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து மென்று சாற்றை தொண்டையில் பரவவிட்டால் தொண்டை வளமாகும். அந்தச் சாறு நுரையீரல் முழுவதும் பரவி சளி தொந்தரவை போக்கும். மேடையில் பாடுபவர்களுக்கு இது சிறந்த நிவாரணி.
குளிர்காலத்தில் தொண்டை கட்டிக்கொண்டால் முருங்கைச் சாற்றுடன் கொஞ்சம் சுண்ணாம்பை குழைத்து தொண்டையின் வெளிப்புறத்தில் பரவலாக பூசிவிட வேண்டும். தொண்டை கமறல் நீங்கிவிடும். சுண்ணாம்பை நேரிடையாக சாப்பிட முடியாது. அதைப் பதப்படுத்தி சாப்பிடும் பக்குவத்தில் கடைகளில் விற் கிறார்கள். கலர் சேர்க்காத வெள்ளை சுண்ணாம்புதான் சிறந்தது.

இன்று நாம் உபயோகிக்கும் சுண்ணாம்பு கடல் சிப்பியிலிருந்து எடுக்கும் சுண்ணாம்பு அல்ல. சுண்ணாம்பு கற்களை நீர்த்தி எடுக்க படுபவை
கடல் சிப்பிகளிலிருந்து உண்டாக்கபட்ட சுண்ணாம்பு அது தான் உண்ண தகுந்தவை மருத்துவ குணம் வாய்ந்தது.

அது விலை சற்று அதிகம் என்பதால் அந்த சுண்ணாம்பை உபோகிக்காமல் இருந்துவிட்டோம்

சிப்பிசுண்ணாம்பு தான் மருத்துவ குணம் கொண்டது. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.

வெற்றிலை உடன் பாழாய் போன புகையிலையும் சேர்த்து போடுபவர்களுக்குதான் தொண்டை மற்றும், வாய்...
புற்று நோய் வந்தது...

Wednesday 13 May 2020

Rig Vedha Aswalayana Sutra Sandhyavandanam






































The Life Histroy of Shri Mahava Sadasiva Golwakar alias Guruji

 ஸ்ரீ குருஜியை சர் சங்கசாலக்(தலைவர்)  என்று அறிவித்த அதிகாரி யார் ❓
🚩 நாகபுரி மாகாண சங்கசாலக்(தலைவர்)மானனீய ஸ்ரீபாபா சாஹேப் பாத்யே.

 ஸ்ரீகுருஜி சர் சங்கசாலக் ஆக பொறுப்பேற்றவுடன் தன்னை எவ்வாறு குருஜி வர்ணித்துக் கொண்டார்❓
🚩"  நான். மாடுமேய்க்கும் சிறுவன்" என்றும், விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தை போன்றது சர்சங்கசாலக் பொறுப்பு என்றும் வர்ணித்தார் .

ஸ்ரீ குருஜியின் பூர்வீக கிராமம் எது ❓
🚩 பம்பாய்க்கு தெற்கே கொங்கண பிரதேசத்தில் கோல் வாலி கிராமம் .

ஸ்ரீ குருஜியின் பெற்றோர்கள் யாவர் ❓
🚩  தந்தை ஸ்ரீ சதாசிவ ராவ் தாய் ஸ்ரீமதி லக்ஷ்மி.

ஸ்ரீ குருஜி உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் ❓
🚩  9 பேர் ஸ்ரீ குருஜி ஒன்பதாவது குழந்தை.

ஸ்ரீ குருஜி பிறந்த தேதி யாது ❓
🚩 மகா மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி 19-02-1906 திங்கட்கிழமை.

ஸ்ரீ குருஜிக்கு பெற்றோர் இட்ட பெயர் யாது❓
🚩 மாதவ் மது என்று அழைத்தனர்  பரம பூஜனீய மாதவ சதாசிவ கோல்வால்கர்.

ஸ்ரீ குருஜி பிறந்த ஊர் எது ❓
🚩 நாகபுரி.

ஸ்ரீ குருஜி ஷாகா கார்யவாஹ் பொறுப்பேற்றது எந்த ஊர் ஷா
காவில்❓(ஷாகா என்பது தினசரி ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு மணிநேரம் ஒன்றாக சேர்ந்து உடல் மனம் அறிவுக்கு பயிற்சி எடுத்துக் கொள்வது ஷாகா கிளை என்று அர்த்தம் )
🚩துளஸீபாக் ஷாகா 1934-ல்.

ஸ்ரீ குருஜி சங்க(சிஷா வர்க) பயிற்சி முகாமில் வகித்த பொறுப்பு என்ன❓
🚩 1934 விதர்பா முகாமில் முகாம் பொறுப்பாளர்.

ஸ்ரீ குருஜி சட்டப் படிப்பில் L.L.B எப்போது தேர்ச்சி பெற்றார்❓
🚩1934.

1935 அக்டோபர் மாதம் நடந்த மாற்றம் என்ன ❓
🚩ஸ்ரீ குருஜி சாரா காச்சி சென்று இராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்தார்.

ஸ்ரீ குருஜியின் குரு யார் ❓
🚩சுவாமி அகண்டானந்தர். (இவர் விவேகானந்தரின் சமகால சீடர்கள்)

ஸ்ரீ குருஜி தீட்சை எப்போது பெற்றார் ❓
🚩1936 ஜனவரி 13 மகரசங்கராந்தி அன்று.

ஸ்ரீ குருஜி தீட்சை பெற்ற போது அவருக்கு அவரது குரு இட்ட கட்டளை யாது ❓
🚩மக்கள் தொண்டு செய்ய வேண்டும் என்பது.

நாக்பூர் எப்போது திரும்பினார் ❓
🚩1937-ல். டாக்டர் ஜி உடன் நெருக்கம் அதிகரித்தது.

 ஸ்ரீ குருஜி RSS  அகில பாரத செயலாளர் (ஸர்கார்யவாஹ்)என்று எப்பொழுது அறிவிக்கப்பட்டார் ❓
🚩1938 ஆகஸ்ட் குருபூஜை ரக்ஷாபந்தன் விழா சமயத்தில் டாக்டர்ஜியால் அறிவிக்கப்பட்டார் .

கல்கத்தாவில் யாரால் எப்போது ஷாகா  ஆரம்பிக்கப்பட்டது ❓
🚩ஸ்ரீ குருஜி யால் 1939 மார்ச் 22 யுகாதி அன்று.

Thursday 7 May 2020

"ஆதி சங்கரர் கால நிர்ணயம்-- ‘கார்பன் டேட்டிங்'முறையில் ஊர்ஜிதப்படுத்திய பெரியவா".


"ஆதி சங்கரர் கால நிர்ணயம்-- ‘கார்பன் டேட்டிங்'முறையில் ஊர்ஜிதப்படுத்திய பெரியவா".
ஆதி சங்கரர் அவதாரம் செய்தது கி.மு. 509-ஆம் ஆண்டு-.......... (எத்தனை பெரிய விஷயத்தை, எவ்வளவு எளிமையாக மகா பெரியவா முடித்தார் என்று பார்க்க வேண்டும். மகா பெரியவா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்கிற எண்ணமே - சிந்தனையே - உணர்வே - நம் எல்லோருக்கும் மிகப் பெரிய வரப்ரசாதம்!)
கட்டுரை: பி. சுவாமிநாதன். நன்றி: ‘ராணி’ இதழ்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உலகின் பல பாகங்களில் வசிக்கக் கூடிய விஞ்ஞானிகள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் போன்றோர் அவ்வப்போது காஞ்சி மாநகரத்துக்கு விஜயம் செய்து மகா பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற்று விவாதிப்பது வழக்கம்.
வருகின்றவர்கள் ஆச்சரியப்படும்படி அவர்கள் சார்ந்திருக்கிற துறை தொடர்பாக பல்வேறு தகவல்களைச் சொல்லி, அவர்களைப் பிரமிக்க வைப்பார் மகா பெரியவா.
புகழ்பெற்ற புவியியலாளர் (ஜியோலஜிஸ்ட்) ஒருவர் மகா பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற வேண்டும் என்று காஞ்சி சங்கர மடத்துக்கு வந்தார். அவரது பூர்வீகம், குடும்பம், உத்தியோகம் ஆகிய அனைத்தையும் பற்றிக் கேட்டறிந்தார் மகா பெரியவா. அரை மணி நேர சம்பாஷணைக்குப் பிறகு, ஆசி பெற்று கிளம்ப இருந்தவரை, ‘‘எனக்கு ஒரு உபகாரம் பண்ணித் தர முடியுமா?’’ என்று ஒரு குழந்தை போல் கேட்டார் மகா பெரியவா.
புவியியலாளருக்கு நம்ப முடியவில்லை. ‘உலகத்தின் எந்த மூலையிலும் நடக்கின்ற சிறு அசைவையும் அறிந்தவர், நம்மிடம் என்ன உதவியை எதிர்பார்க்கிறார்?’ என்று வியந்து, மகானுக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்தார். எழுந்து நின்றவர், ‘‘பெரியவாளுக்கு என்னால ஏதேனும் உபகாரம் ஆகும்னு இருந்தா, அதைவிட எனக்கு சந்தோஷம் கிடையாது’’ என்று பணிவுடன் சொன்னார்.
‘‘கேரளால இருக்கிற காலடி க்ஷேத்திரம் பத்திக் கேள்விப்பட்டிருக்கியோ?’’ என்றார்.
‘‘தெரியும் பெரியவா. ஆதி சங்கரரோட அவதார பூமி ஆச்சே...’’
‘‘ஆமா... அங்கே பூர்ணா நதி ஓடறது. ஆதி சங்கரரோட தாயார் ஆர்யாம்பாள் அதுலதான் தெனோமும் ஸ்நானம் பண்ணுவா.’’
தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார் புவியியலாளர்.
‘‘பூர்ணா நதிலேர்ந்து நான் சொல்ற ரெண்டு எடத்துல மண்ணு சாம்பிள் எடுத்துக்கோ. அது ரெண்டையும் டெஸ்ட் பண்ணி, எத்தனை காலத்துக்கு முந்தைய மண்ணுன்னு சொல்லணும்.’’
‘‘உத்தரவு பெரியவா.’’
‘‘பூர்ணா நதி கேரளாவில் காலடி க்ஷேத்திரத்துக்குள்ள பாய ஆரம்பிக்கறது இல்லியா? அது காலடிக்குள்ள நுழையற எடத்துக்கு முன்னாடி இருக்கிற ஊர்லேர்ந்து கொஞ்சம் மண்ணு எடுத்துக்கோ.
ரெண்டு எடத்துலேர்ந்து மண்ணு எடுக்கணும்னு சொன்னேன் இல்லியா? ரெண்டாவது மண்ணை எங்கே எடுக்கணும்னா, இந்த நதி காலடி ஊருக்குள்ள பாய ஆரம்பிக்கும். காலடிக்குள்ள பூர்ணா வந்த ஒடனே ஒரு சின்ன யூ டர்ன் போட்ட மாதிரி சங்கரர் வாழ்ந்த கிரஹம் வரை வந்துட்டு, திரும்ப பழைய மாதிரி தனக்கு உண்டான பாதைல இந்த நதி பாய ஆரம்பிச்சிடும், பார்த்திருக்கியோ... அந்த எடத்துலேர்ந்து மண்ணு எடுத்துக்கோ.
நான் சொன்ன இந்த ரெண்டு எடத்துலேர்ந்து மண் எடுத்துக்கோ. ‘கார்பன் டேட்டிங்’ (பழங்காலப் பொருட்களின் வயதைக் கண்டுபிடிப்பது) முறைப்படி ரெண்டு மண்ணோட வயசையும் கண்டுபிடிச்சு எனக்குச் சொல்லு’’ என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லி நிறுத்தினார் மகா பெரியவா.
தன் துறை சார்ந்த பணி என்பதாலும், மகா பெரியவாளே ஓர் உத்தரவு போல் சொன்னதாலும், மிகவும் சந்தோஷத்துடன், ‘‘நிச்சயம் பெரியவா. உடனே பண்றேன்’’ என்று சொல்லி, மகா பெரியவாளுக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார் புவியியலாளர்.
காலடிக்கு முன்னால் பாய்கின்ற ஊரிலும், காலடிக்குள் நுழைந்த பிறகு உள்ள இடத்திலும் மண் சேகரித்தார். மகா பெரியவா சொன்ன சோதனைகளை முடித்தார். பரிசோதனை முடிவுகளைக் கையில் எடுத்துக் கொண்டார். இவற்றை மகா பெரியவாளிடம் தெரிவிப்பதற்காகக் காஞ்சிபுரம் வந்தார் புவியியலாளர்.
ஒரு புன்னகையுடன் அவரை வரவேற்றார் மகா பெரியவா. நமஸ்காரம் செய்து எழுந்து நின்றார் புவியியலாளர். அவர் சொல்லப் போகும் தகவலுக்காக ஆவலுடன் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
‘‘பெரியவா... ரெண்டு எடத்துலயும் மண்ணு எடுத்து, ‘கார்பன் டேட்டிங்’ முறைப்படி வயசைக் கண்டுபிடிச்சுட்டேன். கேரளாவில் காலடிக்குள் நுழைவதற்கு முன் உள்ள மண் சுமார் ஒரு லட்சம் வருடம் ஆனது. அதாவது, இந்த நதியின் வயது ஒரு லட்சம் வருஷம். அடுத்தது - காலடிக்குள் சங்கரர் கிரஹம் இருந்த இடம் அருகே இருந்த மண், சுமார் 2500 வருட பழமை கொண்டது.’’
புவியியலாரையும் அங்கே கூடி இருந்த பக்தர்களையும் பார்த்து மகா பெரியவா புன்னகை பூத்தார்.
‘‘இவர் கொண்டு வந்த ரிசல்ட் படி ஆதி சங்கரரோட அவதார காலம் மேலும் ஊர்ஜிதமாயிடுறது’’ என்று சொன்ன மகா பெரியவா, ஆதி சங்கரர் அவதாரம் செய்தது கி.மு. 509-ஆம் ஆண்டு என்றும், அவர் ஸித்தி ஆனது கி.மு. 477-ஆம் ஆண்டு என்றும் அந்த மகா சபையில் மீண்டும் ஒருமுறை பிரகடனப்படுத்தினார்.
ஆதி சங்கரர் இந்த பூலோகத்தில் வாழ்ந்தது 32 ஆண்டுகளே. ஆதி சங்கரரின் அவதார தினம் மற்றும் ஸித்தி தின ஸ்லோகங்களை வைத்து, அவர் வாழ்ந்த காலத்தை மகா பெரியவா வெளியிட்டார். ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் குறித்துப் பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் அப்போது இருந்தன. இவற்றை எல்லாம் மனதில் கொண்டு, ஒரு புவியியலாளரை வைத்து மண்ணின் வயதைக் கணக்கிடச் சொன்னமைக்கும் ஒரு காரணம் உண்டு.
காலடியில் ஆதி சங்கரர் வசித்த இல்லத்தில் இருந்து சிறிது தொலைவில் பூர்ணா நதி ஓடிக் கொண்டிருந்தது . சங்கரரின் தாயாரான ஆர்யாம்பாள் நித்தமும் பூர்ணா சென்று நீராடித் திரும்புவது வழக்கம். ஒரு நாள் ஆற்றில் நீராடி விட்டு இல்லம் திரும்பும்போது தள்ளாமையின் காரணமாக வழியில் மயங்கி விழுந்து விட்டார் ஆர்யாம்பாள். இதை அறிந்த சங்கரர் கவலைப்பட்டார்.
‘இனி பூர்ணா செல்ல வேண்டாம். இல்லத்தில் இருக்கிற கிணற்றிலேயே நீராடுங்கள்’ என்று தன் தாயாரிடம் சொன்னார் ஆதி சங்கரர்.
ஆனால், ‘என்ன சிரமப்பட்டாலும், நான் இருக்கின்ற வரை பூர்ணாவில்தான் நீராடுவேன்... அது எத்தனை பெரிய பாக்கியம்’ என்று மகனை சமாதானப்படுத்தினார் தாயார்.
அப்போதுதான் ஆதி சங்கரர் கங்காதேவியைப் பிரார்த்தித்துப் பாடல் பாடி, அந்தப் பூர்ணாவையே தனது இல்லம் இருக்கும் பக்கத்துக்குத் திருப்பினார்.
ஆதி சங்கரரின் அவதாரப் பெருமையை நிரூபிக்கும் விதமாகவும், அவரது சந்நியாச தர்மத்துக்கும் கட்டுப்பட்டு பூர்ணா நதியே தன் பாதையைச் சற்று மாற்றிக் கொண்டு பாய ஆரம்பித்தது.
திடீரென தன் வீடு அருகிலேயே பூர்ணா ஓடத் துவங்கியதும், ஆர்யாம்பாளுக்கு சந்தோஷமான சந்தோஷம்.
ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்தில்தான் பூர்ணா, அவரது இல்லம் அருகே பாய்ந்தது. ஆக, இங்கே பாய்கின்ற பூர்ணாவின் மண்ணை சோதித்துப் பார்த்தால், ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் உறுதியாகத் தெரிந்து விடும் என்று தீர்மானித்து, புவியியலாளரிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்து, உலகத்துக்கு ஒரு உண்மையை வெளியிட்டார் மகா பெரியவா.
காலடிக்குள் பூர்ணா நுழைவதற்கு முன் நதியின் வயது ஒரு லட்சம் வருடம்.
காலடிக்குள் நுழைந்த பின் சங்கரர் இல்லம் அருகே எடுத்த மண்ணுக்கு 2,500 வருடம்.
எனவே, ஆதி சங்கரர் அவதாரம் செய்து 2,500 ஆண்டுகள் ஆகி விட்டன என்பது ஊர்ஜிதம் ஆயிற்று

Wednesday 6 May 2020

Tuesday 5 May 2020

*பாஞ்சாலியின் பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்?*

*பாஞ்சாலியின் பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்?*

குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாள்கள் முடிந்து விட்டன.

 'ஒன்பது நாள்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே!' என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்து விட்டான்.

'தாத்தா பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை' என்றே நினைத்தான்.
தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடமும் தெரிவித்தான்.
துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதே கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார்.
ஆனால், துரியோதனனோ, '`பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீர்கள். `அவர்களைப் போரில் கொல்வேன்'' என்று சொல்லுங்கள்' என்றான்.
செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமே என்பதற்காக பீஷ்மரும், `"அப்படியே ஆகட்டும்'' என்று கூறிவிட்டார்.
அதே தருணத்தில் பாண்டவர்களின் பாசறையில் இருந்த கண்ணன் லேசாகச் சிரித்தான்.
அவனுடைய சிரிப்பின் காரணம் அங்கிருந்த பாண்டவர்களுக்குப் புரியவில்லை.
சற்றைக்கெல்லாம், பீஷ்மர் செய்த சபதம் பாண்டவர்களுக்குத் தெரியவந்தது.
அர்ஜுனன் உட்பட அனைவருக்கும் கலக்கம் ஏற்பட்டு விட்டது.
பிதாமகர் பீஷ்மர் எவராலும் வெற்றி கொள்ள முடியாதவர் ஆயிற்றே. நன்றிக் கடனுக்காக அவர் துரியோதனன் பக்கம் இருந்தாலும், தர்மம் வெல்லும் என்று நமக்கு ஆசி கூறியவர் ஆயிற்றே. அவரே இப்போது நம்மை ஒழிப்பதாக சபதம் செய்திருப்பதால், நிலைமை நமக்கு பாதகமாகத்தானே இருக்கும் என்று நடுங்கினார்கள்.
பாண்டவர்களின் இந்தச் சோர்வையும் கலக்கத்தையும் கண்ட பாஞ்சாலி, மிகவும் கவலை கொண்டாள்.
இனி தன்னுடைய சபதம் என்னாவது? போரின் திசையே மாறிவிடும் போலிருக்கிறதே. இந்தக் கண்ணன் என்ன ஆனார். அவருக்கு இதெல்லாம் தெரியுமா இப்படியெல்லாம் பாஞ்சாலி நினைத்துக் கொண்டிருந்தபோதே, கண்ணன் அங்கே வந்து சேர்ந்தான்.
பாஞ்சாலியைப் பார்த்து, ``சத்தம் செய்யாமல் என் பின்னால் வா’’ என்று மிக மெல்லிய குரலில் கூறி, அந்த நள்ளிரவில் அவளை எங்கேயோ அழைத்துச் சென்றான். போர்க்களத்தினூடே கண்ணன் நடந்து சென்றுகொண்டிந்தான்.
ரணகளமாக மாறியிருந்த யுத்த பூமியில் மரண அவஸ்தையில் வீரர்கள் எழுப்பிய அவலக் குரல்களின் ஒலி, அந்தப் பிரதேசத்தையே அமானுஷ்யமாக மாற்றியிருந்தது.
ஆனாலும், கண்ணன் உடனிருக்கிறான் என்ற தைரியத்தில் பாஞ்சாலிக்குச் சிறிதும் அச்சம் ஏற்படவில்லை. எதையும் பொருட்படுத்தாமல் கண்ணனின் பின்னால் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள்.
யுத்தகளத்தை விட்டுச் சற்று விலகியதும் மற்றொரு சத்தம் கேட்டது.
அரசகுலத்தில் பிறந்தவள் ஆதலால், பாஞ்சாலி அணிந்திருந்த விலையுயர்ந்த காலணிகள் எழுப்பிய ஓசைதான் அது.
திடீரென்று ஓரிடத்தில் நின்ற கண்ணன், பாஞ்சாலியைப் பார்த்து, ``சகோதரி, உன் காலணிகள் மிகவும் சத்தம் எழுப்புகின்றன. அவற்றைக் கழற்றிப் போடு’’ என்று கூறினான்.
பாஞ்சாலியும் அப்படியே காலணிகளைக் கழற்றி வீசினாள்.
பின்னர், தொலைவிலிருந்த ஒரு கூடாரத்தைச் சுட்டிக் காட்டிய கண்ணன், ``பாஞ்சாலி, நீ எவரும் அறியாமல் அந்தக் கூடாரத்துக்குச் செல். உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கும் மனிதரின் காலில் விழு. மற்றபடி ஏன், எதற்கு என்றெல்லாம் கேட்காதே’’ என்றான்.
பாஞ்சாலியும் கண்ணன் சொன்னபடியே கூடாரத்துக்குள் சத்தம் செய்யாமல் நுழைந்தாள்.
அங்கே ஒரு மனிதர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அவர் திரும்பிப் பார்ப்பதற்குள் அவருடைய காலில் விழவேண்டும் என்ற வேகத்துடன் அவருடைய கால்களில் விழுந்தாள் பாஞ்சாலி.
யாரோ ஒரு பெண் தன் காலில் விழுவதைக் கண்ட பீஷ்மர், ``தீர்க்கசுமங்கலியாக இரு பெண்ணே’’ என்று வாழ்த்தினார்.
பின்னர் அவளை எழுந்திருக்கச் சொன்னதுடன், அவள் யாரென்றும் கேட்டார்.
பாஞ்சாலி எழுந்தாள். அவளைப் பார்த்ததுமே பீஷ்மர் திடுக்கிட்டார். `போயும் போயும் இவளையா வாழ்த்தினோம்?' என்று தனக்குள் மருகினார்.
நாளைய போரில் யாரை ஒழித்துக்கட்டப் போவதாக துரியோதனனுக்கு வாக்களித்திருந்தாரோ, அந்தப் பாண்டவர்களின் பத்தினியை, `தீர்க்கச் சுமங்கலியாக இரு' என்றல்லவா வாழ்த்தி விட்டார். தெய்வம் தன்னை மிகவும் சோதிப்பதாக எண்ணி வருந்தினார் பீஷ்மர்.
பாஞ்சாலியைப் பார்த்த பீஷ்மர், ``அம்மா பாஞ்சாலி, பிணங்கள் குவிந்திருக்கும் இந்த யுத்தக் களத்தினூடே நீ தனித்தா வந்தாய்? உன்னை யார் இங்கே அழைத்து வந்தார்கள்?’’ என்று கேட்டார்.
அப்போது கூடாரத்தின் வாயிலில் ஏதோ நிழல் அசைவதுபோல் தெரிந்தது.
அங்கே கண்ணன் நின்று கொண்டிருந்தான். பீஷ்மருக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்துவிட்டது.
``வா கண்ணா, வா. இது உன் வேலையாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். இது என்ன கையில் ஏதோ துணிமுடிச்சு?’’ என்று கேட்டார்.
``ஓ, இதுவா? பாஞ்சாலியின் பாதணிகள்தாம் இவை. அதிக ஓசை எழுப்பவே கழற்றச் சொன்னேன். அதைத்தான் என் உத்தரியத்தில் முடிந்து வைத்திருக்கிறேன்’’ என்றான்.
கண்ணன் சொன்னதுதான் தாமதம். திரௌபதி பாய்ந்து சென்று அதைப் பிடுங்கினாள். ``கண்ணா! இது என்ன சோதனை. என் காலணிகளை நீ சுமப்பதா? என்னை மகாபாவியாக்க வேண்டுமென்பதுதான் உன் எண்ணமா?’’ - அவள் கண்கள் கண்ணீரை உகுத்தன.
``தங்கையின் செருப்பை அண்ணன் தூக்குவது தவறல்ல. பேசாதிரு. பெரியவர் பீஷ்மரிடம் உன் கோரிக்கையைச் சொன்னாயல்லவா" என்றான் கண்ணன்.
பீஷ்மர் குறுக்கிட்டு, ``மாயவனே! அவள் ஏதும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால், நான் என்ன சொல்ல வேண்டுமென்று நீ தீர்மானித்திருக்கிறாயோ அதை நான் அந்தப் பெண்ணுக்கு ஆசிமொழியாகச் சொல்லிவிட்டேன். நீ பொல்லாதவன். *உன்னை அபயம் என்றெண்ணியிருப்போரைக் காக்க, அவர்களின் பாதணிகளைக்கூட தாங்கிக் கொண்டிருப்பாய்*. பாண்டவர்களுக்கு உன் அருள் இருக்கும்போது இந்த பீஷ்மனால் அவர்களை என்ன செய்துவிட முடியும்? கோபாலா, நீ யார் என்பதை நன்றாக அறிந்தவன் நான். ஏதோ உணர்ச்சிவசத்தில் என்னால் எல்லாம் ஆகுமென்று நினைத்து விட்டேன். அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்ட, பக்தர்களை ரட்சிக்கும் பக்தவத்சலனாக இப்படி பாஞ்சாலியின் பாதணிகளைச் சுமந்து வந்து நிற்க வேண்டுமா?’’ என்று வினவினார். பிதாமகரின் கண்களிலும் நீரருவிகள் கொப்பளித்தன.
மறுநாள் போரில் அந்தப் பழுத்த பழம் அம்புப் படுக்கையில் விழுந்ததைத்தான் பாரதம் சொல்லுமே?
நீங்கள் கண்ணனை நீங்காது நினைத்திருங்கள், மற்றவை அவன் கடமை.
ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

"சம்பு வைத்தியமா? வசம்பு வைத்தியமா?"

"சம்பு வைத்தியமா? வசம்பு வைத்தியமா?"

 (ரெண்டு கிட்னியும் செயலிழந்த பக்தருக்கு அருளிய சம்பவம்)

நன்றி- குமுதம்.லைப் (ஓரு பகுதி)
 

தொகுப்பு-வெ.ஐஸ்வர்யா.
 

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

ஒரு சமயம் மகாபெரியவா.ஸ்ரீமடத்துல இருந்த நேரம். அவரைப் பார்க்கறதுக்காக ஒரு பக்தர் வந்திருந்தார்.

அந்த வரிசையில நிற்கற சமயத்துலயே அவரோட
கண்ணுலேர்ந்து வழிஞ்சுண்டு இருந்த நீர், அவர்
ஏதோ பெரிய கஷ்டத்துல இருக்கார்ங்கறதை
உணர்த்தித்து. வழக்கமா, யாராவது பெரிய சங்கடத்தோட வந்திருக்கான்னு தெரிஞ்சா, மகாபெரியவா அதை தானாவே உணர்ந்து, அவாளைக் கூப்பிடச் சொல்லி முன்கூட்டியே தரிசனம் தந்து அவாளுக்கு ஆறுதலோ,
ஆலோசனையோ சொல்லி அனுப்புவார்.அதே மாதிரி, இவரையும் ஆசார்யா கூப்பிடுவார்னு வழக்கமா வர்றவா பலரும் நினைச்சா. ஆனா,அப்படி எதுவும் நடக்கலை.


வரிசை நகர்ந்து தன்னோட முறை வந்து மகாபெரியவா முன்னால போய் நின்னதும் ,அதுவரைக்கும் சத்தம் இல்லாம
அழுதுண்டு இருந்தவர்,வாய்விட்டுக் கதறி, 'ஓ'வென்னு அழ ஆரம்பிச்சுட்டார்.,சில நிமிஷத்துக்கு அப்புறம்.


"பெரியவா...நீங்கதான் என்னைக் காப்பாத்தணும்..
என்னோட கிட்னி ரெண்டும் சரியா வேலை செய்யலைன்னு டாக்டரெல்லாம் சொல்றா. ஆறேழு மாசமா மருந்தெல்லாம் எடுத்துக்கறேன்.ஆனா, ஒரு துளி முன்னேற்றமும் இல்லை. நாளுக்கு நாள் மோசமாகிண்டுதான் இருக்குன்னு சொல்றா..
என்அக்கு என்ன பண்ண்றதுன்னே தெரியலை.. அதான் இங்கே ஓடி வந்திருக்கேன்...!" தழுதழுப்பா சொன்னார்.


 "ஓஹோ...ஒனக்குப் பிரச்னை வந்ததுக்கு அப்புறம்தான் நல்லதெல்லாம் ஞாபகத்துக்கு வருதோ?" வழக்கமா கஷ்டம் பிரச்னைன்னு வர்றவாகிட்டே கொஞ்சம் ஆறுதலா பேசக்
கூடிய மகாபெரியவா, அவர்கிட்டே ஏதோ கொஞ்சம்
கடுமையாவே பேசினார்


வந்தவர்,கையைப் பிசைஞ்சுண்டு எதுவும் பேசாம
தலைகுனிஞ்சு நிற்க ஆசார்யாளே பேசத் தொடங்கினார்.


"தானம்,தர்மம்,நல்ல காரியங்கள். இதெல்லாம் அந்தக் காலத்துல பலரும் பண்ணிண்டு இருந்தா. நாடும்,அவா அவா குடும்பமும் செழிப்பா இருந்தது. எல்லாருக்கும் எல்லாமும் கிடைச்சுது.சுபிட்சமும் நிலவித்து. ஆனா இப்போ,முன்னோர்கள்
என்ன்வோ முட்டாள்தனமா செலவு பண்ணிட்டதா
நெனைச்சுண்டு அவா செஞ்ச தர்மகாரியத்தை எல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டா இந்தத் தலைமுறைக்காரா.


 எப்போ தர்ம காரியங்களைத் தடுத்து நிறுத்தறோமோ அப்பவே இந்த மாதிரி சங்கடமெல்லாம் தலைதூக்கறதுக்கு நாமளே வழி செஞ்சு விட்டுடறோம். அதெல்லாம் வந்ததுக்கு அப்புறம்
 

வந்துடுத்தே வந்துடுத்தேன்னு பிராயச்சித்தம் தேடறோம்!" கொஞ்சம் கடுமையாகவே சொன்னார்,மகாபெரியவா

வந்தவர் அப்படியே மகாபெரியவர் திருவடியில விழுந்தார். ".என்னை மன்னிச்சுடுங்கோப்பெரியவா. என்னோட முன்னோர்கள் மாசத்துக்கு ஒருதரம் அன்னதானம் செய்யறதையும்,நிரந்தரமா தண்ணீர்ப் பந்தல் வைக்கறதையும் வழக்கமா வைச்சிருந்தா. அதுக்காக தனியா இடமெல்லாம் கூட இருந்தது. நான் பாவீ! அதெல்லாம் வீண் விரயம்னு எல்லாத்தையும் நிறுத்திட்டு,அந்த இடத்தையும் வித்துட்டேன்..! அந்தப் பாவம்தான் போல இருக்கு எனக்கு. இப்படி ஒரு தீராக் கஷ்டம் வந்துடுத்து...!"
சொன்னவர் வாய்விட்டுக் கதறி அழுதார்.

ஒரு சில நிமிஷத்துக்கு அப்புறம்,"பெரியவா, நான் நிறுத்தின எல்லாத்தையும் மறுபடியும் ஆரம்பிச்சுடறேன். எனக்கு நீங்க ஆசிர்வாதம் மட்டும் பண்ணினாலே போதும்.இந்த கிட்னி பிரச்னையை எனக்கு கிடைச்ச தண்டனையா ஏத்துக்கறேன்!:
 

தழுதழுக்கச் சொன்னார்

அன்பே வடிவான தெய்வம் யாரையாவது தண்டிக்க நினைக்குமா என்ன? அது நினைப்பதெல்லாம் தவறை உணரணும் என்பதைத்தானே..! தவறை உணர்ந்தாலே மன்னிப்பு அருளும் மகத்தானது அல்லவா தெய்வம்! வந்தவரை மன்னிச்சுட்டதுக்கு
அடையாளமா வாத்ஸல்யமா பார்த்தார் மகாபெரியவா.


"நாட்டு மருந்துக் கடையில வசம்புன்னு ஒரு மருந்து விற்பா... பிள்ளைவளர்ப்பான்னு அதுக்கு சூசகமான பேரு உண்டு. சந்தனக் கல்லுல உரைச்சு, தினமும் உன் தொப்புளைச் சுத்திப் போட்டுக்கோ..!" சொன்ன பெரியவா, ஆசிர்வதிச்சு அவரை அனுப்பினார்.

பத்துப் பதினைஞ்சு நாள் கழிஞ்சிருக்கும்.ரொம்ப சந்தோஷமா வந்தார் அந்த பக்தர்.ஆசார்யாளை சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார்.

"பெரியவா,நீங்க சொன்ன மாதிரியே செஞ்சேன் .நேத்திக்கு என்னை பரிசோதிச்ச டாக்டர்கள், 'சிறுநீரகத்துல எந்தக் குறையுமே இல்லை.இது என்ன அதிசயம்!'னு கேட்கறா...

'சாட்சாத் சம்புவாகவே (சிவபெருமான்) நடமாடிண்டு இருக்கற மகாபெரியவா சொன்ன வசம்பு வைத்தியம்!னு சொன்னேன்..!" சொல்லித் தழுதழுத்தார்.

"நானெல்லாம் ஒண்ணும் பண்ணலை. ஒன் முன்னோர் பண்ணின தர்மகார்யத்தோட புண்ணியம் ஒன்னைக் காப்பாத்தியிருக்கு. இனிமேலாவது அதையெல்லாம் விடாம பண்ணு...க்ஷேமமா
இருப்பே..!" ஆசிர்வாதம் பண்ணின ஆசார்யாளோட குரல், அங்கே இருந்தவா எல்லாருக்கும் கடவுளோட குரலாகவே ஒலிச்சுது!.