Tuesday 17 December 2019

ஸத்வம் ஸத்வவதாம் அஹம் - பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்) என்று கண்ணன் கீதையில் கூறுகிறான்.

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் , தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான்.

ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்.
“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன்.

“ஆஹா ! நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான்.

நீ உன் திறமையை நம்புகிறாய் !” என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்.

அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், “கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை !” என்றார்.

“அது என்ன ?! ” என்று கேட்டான் அர்ஜுனன்.

“நேரம் வரும் போது சொல்கிறேன் !” என்றார் வியாசர்.

பல ஆண்டுகள் கழிந்தன.

மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின், கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான்.

“அர்ஜுனா ! நான் எனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன்.

அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்று விடு!” என்று கூறினான் கண்ணன்.

கனத்த மனத்துடன் கண்ணனிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன் , தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள்.

அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன். ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை. பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்த முடியாதவன் என்று போற்றப்படுபவனும், வில் விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்திவிட்டார்கள். தன் வாழ்வில் முதன் முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன்.

அதுவும் வெறும்  சாதாரணத் திருடர்களிடம்

வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில், இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன். அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர்.

“அர்ஜுனா ! நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது !” என்று கூறினார் வியாசர்.

"கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது.

இது வரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே ! என்ன காரணம்?” என்று கேட்டான் அர்ஜுனன்.

அதற்கு வியாசர் , “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால், இதை உன்னால் தூக்க முடியவில்லை!” என்றார்.

மேலும் , “ சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது, அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தெரியுமா? கண்ணனின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கிவிட்டாய்.

ஆனால் கண்ணனின் அருள் பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும்.

அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன், கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து , காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான் !” என்றார் வியாசர்.

இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட , அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது.

இக்கருத்தை “ஸத்வம் ஸத்வவதாம் அஹம்”
                   
( பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்) என்று கண்ணன் கீதையில் கூறுகிறான்.

இத்தகைய மகா பலத்தோடு கூடியவராகத் திருமால் விளங்குவதால் ‘மஹாபல :’ என்று அழைக்கப்படுகிறார்.

Wednesday 11 December 2019

Remembering Mahakavi C.Subramanya Bharathi on his Birth Anniversary

Remembering Mahakavi C.Subramanya Bharathi on his Birth Anniversary. His extraordinary contribution to India's Freedom Movement and Literature will be remembered forever. #bharathiyar







Education is not, about learning facts, it is a tool, training to think.

Education is not, about learning facts, it is a tool, training to think.

Friday 6 December 2019

பெருமை மிகுந்த மார்கழி மாதம்





பெருமை மிகுந்த மார்கழி மாதம்

மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி என்பார்கள். அதனால்தான்,  மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று ஸ்ரீகிருஷ்ணனே கூறியிருக்கிறார். மேலும் அவரே, கீதையில் "மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்" என்று சொல்கிறார்.

அத்தனை சிறப்புகள் வாய்ந்தது இந்த மார்கழி மாதம். அதிகாலை எழுந்து கோலம் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்கிறோம். 'பீடு' என்றால் 'பெருமை' என்று பொருள். பெருமை நிறைந்த மாதம் என்பதே மருவி 'பீடை' என்றானது.

அதுவரை இருந்த எல்லா கஷ்டங்களும் நீங்கி வரும் தைத் திங்களில் இருந்து புது வாழ்க்கை அமைய வேண்டும் என பிரார்த்திக்கப்படும் மாதமும் இது தான்.

மார்கழி முப்பது நாட்களும்  பாவை விரதம் இருந்து தானே ஆண்டாள் அந்த பெருமாளையே மணாளனாகக் கொண்டாள். இதிலிருந்தே அந்த மாதத்தின் பெருமையை உணரலாம்.

விடியற்காலையில் இருந்தே, ஆலயங்களில் வழிபாடுகள் தொடங்கிவிடும். அதுபோலவே பல ஆலயங்க ளில் திருப்பள்ளி எழுச்சி பூஜை தொடங்கி விடும்.

மார்கழி மாதத்தில் கோலத்தில் பூ வைப்பதற்கும், சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பதற்கும் முன்னோர்கள் காரணங்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.

பூ வைப்பது ஏன்?

அக்காலத்தில், திருமணத் தரகர்களோ, மாப்பிள்ளை - பெண் தேவை என்பதற்காக வெளியிடப்படும் கல் யாண விளம்பரங்களோ கிடையாது. எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பார்கள். ஒட்டு மொத்தமாக எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டார்கள்.

மார்கழி மாத அதிகாலையில் வீதி பஜனையில் வருபவர்களின் பார்வையில் இந்தப் பூக்கள் தென்படும். விவரத்தைப் புரிந்து கொள்வார்கள். தை மாதம் பிறந்த உடனே பேசி, கல்யாணத்தை முடிப்பார்கள். இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் வீட்டு வாயிலில் இருக்கும் கோலத்தில் பூக்களை வைத்தார்கள்.

அதுபோலவே மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.

திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில்தான்.

இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான் என்பது வரலாறு சொல்லும செய்தி.

எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருமாலை திருப்பாவையால் திருவடித் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம் என்னும் சிறப்பு மிக்க மாதத்தில் தான். இவ்வாறு பல மகத்துவத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது மார்கழி மாதம்.

சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கியமான விசேஷங்களுள் ஒன்று.

ஆன்மிக மலர்ச்சிக்கு சிறந்த மாதமாக கருதப்படும் இந்த மார்கழி மாதத்தில் இறைவனை எண்ணத்தால் துதித்துப் போற்றுங்கள்..... அனைத்து செல்வங்களையும் பெறுங்கள்.

புற்று நோயை போக்கும் மந்திரம்

புற்று நோயை போக்கும் மந்திரம்

புற்று நோயை போக்கும் மந்திரம் காஞ்சி மஹா பெரியவா இந்த மந்திரத்தை அருளியுள்ளார். கீழ் குறிப்பிட்டுள்ள இந்த மந்திரத்தை 45 நாட்களுக்கு 108 முறை பாராயணம் செய்வதன் மூலம் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்திருப்பதாக ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா அவர்கள் கூறியுள்ளார்.

அஸ்மிந்பராத்மந்நநுபாத்மகல்பே
த்வமித்தமுத்தாபிதபத்மயோநிஹி
அநந்தபூமாமமரோகராஸிம்
நிருந்திவாதாலயவாஸவிஷ்ணோ

நம்பிக்கையுடன் முயற்ச்சித்துதான் பாருங்களேன்


Tuesday 3 December 2019

ஸ்ரீ ருத்ரத்தின் இறுதியில், மஹாம்ருத்யுஞ்சய மந்த்ரம் வரும். மிகப் பிரபலமானது.


ஸ்ரீ ருத்ரத்தின் இறுதியில், மஹாம்ருத்யுஞ்சய மந்த்ரம் வரும். மிகப் பிரபலமானது.

"த்ரயம்பகம்யஜாமஹே
ஸுகந்திம்
புஷ்டிவர்தனம்.
உர்வாருகமிவ
பந்தனாத்ம்ருத்யோர்
முக்க்ஷீயமாம்ருதாத்."

இதில்' உர்வாருகமிவ பந்தனாத்முக்க்ஷீய' என்ற வரிகளின் அர்த்தம், 'வெள்ளரிப்பழம் அதன் கொடியிலிருந்து விடுபடுவது போல, என் பந்தங்களிலிருந்து நான் விடுபட வேண்டும்' என்பதாக அமையும். எனக்கு வெகு நாட்களாக ஒரு சந்தேகம். எந்தப் பழமாயிருந்தாலும், பழுத்தவுடன், 'பட்'டென்று தன் கொடி, செடி அல்லது மரத்திலிருந்து அறுந்து விழுந்து விடும்தானே! இதில் வெள்ளரிப்பழத்தை மட்டும் ஏன் இந்த மந்திரத்தில் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது என்று. பல வேத விற்பன்னர்களிடம் கேட்டும் த்ருப்தியான பதில் கிடைக்கவில்லை.

பின்ஒருமுறை, மஹா பெரியவா இதற்கு ஒரு அற்புதமான விளக்கம் அளித்திருந்ததைப் படிக்க நேர்ந்தது. அதாவது, மற்ற பழங்கள் போல் அல்லாமல், வெள்ளரிப்பழம் கொடியில் பூத்துக் காய்த்துப் பழுக்கும். வெள்ளரிக் கொடி, தரையோடு தரையாய்ப் படரும். அதனால், வெள்ளரிப் பழமும், தரைத் தளத்திலேயே பழுத்துக் கிடக்கும். அது பழுத்தவுடன், அதைச் சுற்றியுள்ள கொடியின் கிளைகள், இலைகள் போன்றவை தன்னால் அந்தப் பழத்தை விட்டு விலகுமாம். அதாவது, பழம் கொடியிலிருந்து உதிர்வதில்லை. கொடிதான் பழத்தை விட்டு விலகுகிறது.

அது போல, ஞானிகளுக்கு, அவர்கள் பந்தம், பற்றை விட்டு விலக வேண்டுமென்பதில்லை. சரியான தருணத்தில், 'இவர் பழுத்துவிட்டார்' எனத் தெரிந்தால், பந்தம், பற்று போன்றவை அவரை விட்டு தாமாகவே – எப்படி வெள்ளரிக் கொடி தன் பழத்தை விட்டு விலகுகிறதோ, அது போல - விலகிவிடுமாம்.

அற்புதமானவிளக்கம்.

நமது மந்திரங்களின் ஆழமான கருத்தும் புரிந்து கொள்ள நேர்ந்தது.

மஹாபெரியவாசரணம்.

Monday 2 December 2019

இறைவனிடம் இறைவன் உபதேசம் பெற்ற முக்கியத் திருத்தலங்களும், உபதேசித்த இறைவனும், உபதேசம் பெற்ற இறைவனும்..!

இறைவனிடம் இறைவன் உபதேசம் பெற்ற முக்கியத் திருத்தலங்களும், உபதேசித்த இறைவனும், உபதேசம் பெற்ற இறைவனும்..!

1. ஓமாம்புலியூர்தட்சிணாமூர்த்திஉமாதேவிக்குபிரணவப்பொருள்உபதேசித்தது.

2. உத்திரகோசமங்கை - பார்வதிக்குஇறைவன்வேதாகமலங்களின்இரகசியங்களைஉபதேசித்தல்.

3. இன்னம்பர்அகத்தியர்வழிபாட்டுஇலக்கணஉபதேசம்பெற்றது.

4. திருவுசாத்தானம் - இராமர்சேதுஅணைகட்டுவதற்குஇத்தலத்துஇறைவனிடம்மந்திரஉபதேசம்ராமர்பெற்றார்.

5. ஆலங்குடி - சுந்தரர்தட்சிணாமூர்த்தியைவழிபட்டுபஞ்சாட்சரஉபதேசம்பெற்றார். மற்றும்ஆதிசங்கரர்குருபகவானைதரிசித்துமகாவாக்கியஉபதேசம்பெற்றார்.

6. திருவான்மியூர் - அகத்தியருக்குமூலிகை{வைத்தியம்} பற்றிஉபதேசம்அருளியது.

7. திருவாவடுதுறை - அரிக்கும்அந்தணர்களுக்கும்சிவஞானஉபதேசம்செய்தல், மற்றும்போகர்முதலியநவகோடிசித்தர்களுக்குஅஷ்டமாசித்திஅருளியது.

8. சிதம்பரம் - பைரவர்பிரம்மதத்துவத்தைஉபதேசித்தல்.

9. திருப்பூவாளியூர் - நுன்முனிவர்70பேருக்குபரஞானஉபதேசம்.

10. திருமங்களம் - சௌமினிமுனிவர்க்குசாமவேதம்உபதேசம்.

11. திருக்கழுகுன்றம் - சனகர்முதலியமுனிவர்க்குசாமவேதம்உபதேசம்.

12. திருமயிலை - 1000முனிவர்கள்அறநெறிகளைஅறிவுறையாகபெற்றது.

13. செய்யாறு - வேதம்பற்றிகருப்பொருள்பற்றிதவசிகள்பலருக்குஅருளுரை.

14. திருவெண்காடு - நான்முகன்குருமூர்த்தியிடம்ஞானோயதேசம்பெற்றது, அம்பாள்பிரம்மனுக்குபிரம்மவித்தையைஉபதேசித்ததால்பிரமவித்யாம்பிகைஎன்றுபெயர்.

15. திருப்பனந்தாள் - அம்பாள்ஸ்வாமியிடம்ஞானோபதேசம்பெற்றது.

16. திருக்கடவூர் - பிரம்மன்ஞானோபதேசம்பெற்றது.

17. திருவானைக்கா - அம்பிகைஞானோபதேசம்பெற்றது.

18. மயிலாடுதுறை - குருபகவானிடம்நந்திஉபதேசம்பெற்றது.

19. திருவாவடுதுறை - அகத்தியமுனிவர்க்குபஞ்சாட்சரம்உபதேசம்.

20. தென்மருதூர் - 1000முனிவர்க்குஉபதேசம்அருளியது.

21. விருத்தாசலம் - இறப்பவர்க்குஇறைவன்அவ்வுயிரைதன்தொடைமீதுகிடத்திமந்திரஉபதேசம்மற்றும்இறைவிதன்முந்தானையால்விசிறிவிடுதல்.

22. திருப்பெருந்துறை - மாணிக்கவாசகருக்குகுருத்தமரத்தடியில்உபதேசம்.

23. உத்தரமாயூரம் - ஸ்ரீமேதாதட்சிணாமூர்த்திரிஷபதேவரின்கர்வம்அடக்கிஉபதேசம்செய்தது.

24. காஞ்சி - ஸப்தரிஷிகளுக்குஉபதேசம்.

25. திருப்புறம்பயம் - சனகாதிமுனிவர்களுக்குதர்மோபதேசம்.

26. விளநகர் - அருள்வித்தன்என்னும்மறையவருக்குஞானோபதேசம்.

27. திருத்துருத்தி - சிவன்பிரம்மசாரியாய்வேதத்தைதாமேசொன்னது.

28. கரூர் - ஈசன்இறந்தவர்களைஉயிர்ப்பிக்கும்மந்திரத்தைசுக்கிரனுக்குஉபதேசித்தல்.

29. திருவோத்தூர் - ஈசன்தேவர்களுக்கும்முனிவர்களுக்கும்வேதத்தைஉபதேசித்தல்

ஓம்நமசிவாயஓம்